Advertisement
சைவம்

அடுத்தமுறை கேரட் கூட்டு இப்படி ட்ரை பண்ணி பாருங்க! கேரட்டை வெறுப்பவர்கள் கூட சாப்பிடுவார்கள்!

Advertisement

கேரட் பருப்பு சேர்த்து செய்யும் இந்த சுவையான கூட்டை ஒருமுறை இவ்வாறு சமைத்துப் பாருங்கள். கல்யாண வீட்டு பந்தியில் வைக்கும் அதே சுவையில் இருக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கேரட் வைத்து நிறைய விததமான பதார்த்தங்களை சமைத்திருப்போம். இதுவரை கேரட்டை வைத்து பொரியல் செய்து கொடுத்திருக்கிறோம். ஆனால் இந்த கேரடுடன் பருப்பு சேர்த்து செய்யும் இந்த கூட்டை ஒருமுறை செய்து கொடுத்துப் பாருங்கள். அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

இந்த கேரட் பொரியலை எவ்வளவுதான் சுவையாக செய்தாலும் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடிய பொருட்களில் இந்த கேரட்டும் ஒன்று. குளிர்காலத்தில் கேரட் விலை குறைவாக நமக்கு கிடைக்கும். உங்க வீட்டில் கேரட்டை வாங்கினால் ஒரு முறை தவறாமல் இந்த முறையில் கூட்டு செய்து சாப்பிடுங்கள். இந்த கேரட் கூட்டு அருமையான சுவையைக் கொடுக்கக்கூடிய ரெசிபி. வாங்க நேரத்தை கடத்தாமல் ரெசிபிக்குள் செல்வோம்.

Advertisement

கேரட் கூட்டு | Carrot Kootu Recipe In Tamil

Print Recipe
கேரட் பருப்பு சேர்த்து செய்யும் இந்த சுவையானகூட்டை ஒருமுறை இவ்வாறு சமைத்துப் பாருங்கள். கல்யாண வீட்டு பந்தியில் வைக்கும் அதேசுவையில் இருக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கேரட் வைத்து நிறைய விததமான பதார்த்தங்களைசமைத்திருப்போம். இதுவரை கேரட்டை வைத்து பொரியல் செய்து கொடுத்திருக்கிறோம். ஆனால்இந்த கேரடுடன் பருப்பு சேர்த்து செய்யும் இந்த கூட்டை ஒருமுறை செய்து கொடுத்துப் பாருங்கள்.அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Course poriyal
Cuisine tamil nadu
Keyword Carrot Kootu
Prep Time 5 minutes
Advertisement
Cook Time 10 minutes
Servings 4
Calories 50

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் கேரட்
  • 1 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன். துவரம் பருப்பு
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • உப்பு தேவையானஅளவு

அரைப்பதற்கு

  • 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
  • 1 டீஸ்பூன் சீரகம்

தாளிப்பதற்கு

  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 சிட்டிகை பெருங்காயத் தூள்
  • 1 பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை சிறிது

Instructions

  • முதலில் பாசிப்பருப்பை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் அதனை குக்கரில் போட்டு, அத்துடன் துவரம் பருப்பு, 1 கப் தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கி, மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு மிக்ஸியில் தேங்காய் மற்றும் சீரகம் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
  • பின் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் கேரட்டை சேர்த்து, பச்சை வாசனை போக சிறிது நேரம் வதக்கி, பின் அதில் வேக வைத்த பருப்புக்கள் மற்றும் தண்ணீர் ஊற்றி, கேரட் நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்க வேண்டும்.
  • கேரட் நன்கு வெந்த பின்னர், அதில் அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், கேரட் கூட்டு ரெடி!!!

Nutrition

Serving: 100g | Calories: 50kcal | Carbohydrates: 9.5g | Sodium: 69mg | Fiber: 2.8g | Vitamin A: 16706IU | Vitamin C: 5.9mg | Iron: 0.3mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

3 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

14 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

16 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

24 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

2 நாட்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago