- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish

குளிர்காலத்தில் அதிகமாக விளையும் காய்கறிகளில் ஒன்று கேரட். கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை சரி செய்வது, மலச்சிக்கலைத் தீர்ப்பது வரை கேரட்டில் பல்வேறு நன்மைகள் உள்ளன. காரக்குழம்பு, வத்த குழம்பு போன்ற சுவையான குழம்பு வகைகளில் கேரட் குழம்பும் மிகவும் சுவையாக இருக்கும். பெரும்பாலும் நம் எல்லோரது வீடுகளிலும் கேரட்டில் சாம்பார் வைப்பதை தான் வழக்கமாக வைத்திருப்போம்.
ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக கேரட்டை வைத்து மசாலாக்கள் சேர்த்து ஒரு ரோஸ்ட் எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றிக்கு சூப்பராக இருக்கும். ஒவ்வொரு நாளும் மதிய வேலை உணவிற்காக தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதாவது ஒரு பொரியல், குழம்பு செய்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. அவ்வாறு சாம்பார் வைத்தால் அதிகப்படியாக காரமான பொரியல் வகைகளை தான் செய்கிறோம்.
அவ்வாறு மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட ஒரு அருமையான கேரட் மசாலா ரோஸ்ட் செய்தால் மட்டும் போதும். இதை செய்து விட்டால் எல்லா வகை குழம்புக்கும் ஏற்ற உணவாக இருக்கும். இந்த கேரட் மசாலா ரோஸ்டில் பலவகையான மசாலாக்கள் சேர்த்து செய்வதால், இதன் சுவையோ கறி சுவைக்கு நிகராக இருக்கும். கறி செய்து சாப்பிட முடியாத நாட்களில் இந்த மாதிரி செய்து பாருங்க. கறியே வேண்டாம், இதனையே செய்து கொடுத்தால் போதும் என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லுவார்கள். இந்த சுவையான கேரட் மசாலா ரோஸ்ட் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு கேரட் பக்கோடா இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளா குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க!!
Ingredients
Method
முதலில் கேரட்டை தண்ணீரில் அலசி விட்டு தோல் சீவி வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய கேரட்டை சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, காஷ்மீர் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள் சேர்த்து பத்து நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
கேரட் நன்கு வெந்து மசாலா வாசனை போனதும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான கேரட் மசாலா ரோஸ்ட் தயார்.






