- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Side Dish

காலிஃப்ளவர் வச்சு 65, காலிஃப்ளவர் பக்கோடா, காலிஃப்ளவர் கூட்டு, காலிஃப்ளவர் குருமா, காலிஃப்ளவர் வறுவல் இது எல்லாமே செஞ்சிருப்பீங்க. ஆனா காலிபிளவர் வெள்ளை சுண்டலும் சேர்த்து இந்த மாதிரி ஒரு சூப்பரான காலிஃப்ளவர் சென்னா பொரியல் செஞ்சு பாருங்க டேஸ்ட் அவ்வளவு டேஸ்டா இருக்கும். இந்த டேஸ்டான பொரியல் ஒரு தடவ செஞ்சு பாத்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு இந்த பொரியல் ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த பொரியல் செய்வதற்கு நமக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் தான் தேவைப்படும். வெள்ளை சுண்டல் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது.
ஆனா அதை அப்படியே கொடுத்தா ஒரு சிலர் சாப்பிட மாட்டாங்க அந்த மாதிரி சாப்பிடாதவங்களுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபி செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க. இஞ்சி பூண்டு விழுது சோம்பு, சீரகம் இதெல்லாம் சேர்த்து செய்றதால வாசனையா சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க கண்டிப்பா செம டேஸ்டா இருக்கும். தயிர் சாதத்துக்கு ரசம் சாதத்துக்கு சாம்பார் சாதத்துக்கு எல்லாத்துக்குமே சூப்பரா இருக்கும். சுட சுட சாதத்துல கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம். அவ்ளோ டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே செஞ்சு சாப்பிட்டு பாக்கணும்.
இந்த ரெசிபி சின்ன குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. ஒரே மாதிரியா பொரியல் செய்யாம இந்த மாதிரி வித்தியாசமா செஞ்சீங்கன்னா கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. சைவ விருந்து வைக்கும்போது அதுல எப்பவுமே ஒரே மாதிரியா முட்டைக்கோஸ் உருளைக்கிழங்கு செய்யாம இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை செஞ்சு வைக்கலாம் சாப்பிடறவங்க டேஸ்ட்ல அசந்து போயிடுவாங்க. இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான காலிஃப்ளவர் சென்னா பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காலிஃபிளவர் குடைமிளகாய் பொரியல்
Ingredients
Method
காலிஃப்ளவரை மஞ்சள் கலந்த சுடுதண்ணீரில் 10 நிமிடம் போட்டு எடுக்கவும்.
வெள்ளை சுண்டலை 8 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் சேர்த்து இரண்டு விசில் விட்டு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் சோம்பு கருவேப்பிலை பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கியதும் தக்காளி சேர்த்து மசிய வதக்கி கொள்ளவும்.
மஞ்சள் தூள் சாம்பார் பொடி கரம் மசாலா உப்பு சேர்த்து நன்றாக கலந்து வேகவைத்த சுண்டல் காலிபிளவர் சேர்த்து கிளறி விடவும்.
காலிஃபிளவர் நன்றாக வெந்ததும் கறி மசாலா தயிர் சேர்த்து நன்றாக கலந்து இறக்கினால் சுவையான காலிஃப்ளவர் சென்னா மசாலா தயார்.






