ருசியான செட்டிநாட்டு ஸ்டைல் வெந்தயக் குழம்பு ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!

வெந்தய தோசை, வெந்தயக் கஞ்சி, வெந்தயக் களி, வெந்தயக் குழம்பு, வெந்தய காபி, வெந்தய சாதம் என பலவகையில் வெந்தயத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரை இரண்டுமே ஆரோக்கியத்துக்கும், பல நோய்களுக்கும் தீர்வாக விளங்குகிறது. வெந்தயத்தில் அதிகளவு இரும்புச் சத்

By Prem Kumar · 10/3/2024

வெந்தய தோசை, வெந்தயக் கஞ்சி, வெந்தயக் களி, வெந்தயக் குழம்பு, வெந்தய காபி, வெந்தய சாதம் என பலவகையில் வெந்தயத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரை இரண்டுமே ஆரோக்கியத்துக்கும், பல நோய்களுக்கும் தீர்வாக விளங்குகிறது. வெந்தயத்தில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது. இது உடல் சூட்டை தணிக்கும். ரத்த விருத்திக்கு உதவும். வெந்தயம் ஜீரண சக்தியை அதிகரித்து பசியை தூண்டுகிறது. சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது உணவில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெந்தயத்தில் ஏராளமான வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்துள்ளன. இதை வைத்து கிரேவி, குழம்பு என்று ஒவ்வொரு நாளும் ஒரு விதத்தில் சமைத்துக் கொள்ளலாம். எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு ஆரோக்கியம் தான். ஆனால் நாவிற்கு உடலுக்கு செய்து கொடுத்தால் தானே நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவார்கள்.

ஒருமுறை வெந்தயத்தில் இப்படி குழம்பு வைத்து சுடச்சுட சாதத்தில் போட்டு கொஞ்சமாக நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். சொல்லும் போதே மணக்க மணக்க வாசம் வீசும். இந்த குழம்பு சாப்பிடுவதற்கு மட்டுமின்றி குழந்தைகளின் உடலுக்கு பல ஆரோக்கியங்களை தருவதற்கும் மிகவும் முக்கியமாக இருக்கிறது, எனவே நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த குழம்பை செய்து கொடுங்கள். வழக்கமான குழம்பை விட இதுபோன்ற குழம்பு செய்து சாதத்தில் பிரட்டி குழந்தைகளுக்கு கொடுக்கும் போது நமது லஞ்ச் பாக்ஸ் சீக்கிரம் காலியாகிவிடும். இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். இது உருளைக்கிழங்கு வருவல், மற்றும் சிப்ஸ் ஆகியவற்றுடன் சேர்ந்து சாப்பிட சுவையாக இருக்கும். இந்த செட்டிநாடு ஸ்பெஷல் வெந்தயக் குழம்பை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ருசியான பூண்டு வெந்தய பொங்கல் இப்படி செய்து பாருங்க உடலுக்கு மிகவும் நல்லது, மருத்துவ குணங்கள் அடங்கியது இந்த பொங்கல்!

Recipes AMP · Quick view
View full