Advertisement
சைவம்

செட்டிநாட்டு சுவையில் அருமையான தெரக்கல் குழம்பு  ஒரு முறை செய்து விட்டால் இனி அடிக்கடி இப்படித்தான் செய்வீர்கள்!!!

Advertisement

செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் அனைத்துமே தனிச்சுவையுடன் இருக்கும். உங்களுக்கு உங்கள் வீட்டில் செட்டிநாடு ஸ்டைல் சைவ குழம்பு  செய்ய, பலரும் விரும்பி சாப்பிடும் கத்தரிக்காய், உருளைக்கிழங்கைக் கொண்டு ஒரு அற்புதமான தெரக்கல் குழம்பு செய்யலாம். இந்த செட்டிநாடு ஸ்டைல் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு தெரக்கல் குழம்பு சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும். இவ்வாறு செட்டிநாடு உணவுகள் என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் இந்த செட்டிநாட்டு சமையல் செய்யக்கூடிய தெரக்கல் குழம்பு எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தெரக்கல் குழம்பு | Chettinad Therakkal Kulambu

Print Recipe
செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் அனைத்துமே தனிச்சுவையுடன் இருக்கும். உங்களுக்கு உங்கள் வீட்டில் செட்டிநாடுஸ்டைல் சைவ குழம்பு  செய்ய, பலரும் விரும்பி சாப்பிடும் கத்தரிக்காய், உருளைக்கிழங்கைக்கொண்டு ஒரு அற்புதமான தெரக்கல் குழம்பு செய்யலாம். இந்த செட்டிநாடு ஸ்டைல் கத்தரிக்காய்உருளைக்கிழங்கு தெரக்கல் குழம்பு சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும். இவ்வாறு செட்டிநாடுஉணவுகள் என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் இந்த செட்டிநாட்டு சமையல் செய்யக்கூடியதெரக்கல் குழம்பு எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.
Advertisement
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Chettinad Therakkal Kulambu
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Calories 115

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 3 கத்தரிக்காய்
  • 1 உருளைக்கிழங்கு
  • 1 தக்காளி
  • 1 பெரியவெங்காயம்

தாளிக்க

  • எண்ணெய்
  • சோம்பு
  • மிளகு
  • ப‌ட்டை

அரைக்க

  • 4 பமிளகாய்
  • 6 பமிளகாய்
  • 1 தே‌க்கர‌ண்டி சோம்பு
  • 1 தே‌க்கர‌ண்டி சீரகம்
  • 1 மூடி தேங்காய்
  • 2 முந்திரிப்பருப்பு
  • 2 தே‌க்கர‌ண்டி பொட்டுக்கடலை
  • உப்பு தேவைக்கேற்ப

Instructions

  • கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மூன்றையும் சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கவும்.  தேங்காயைத்துருவிக்கொள்ளவும். தக்காளியை நறுக்கவும்.
  • அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை, ஒன்று ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்கவும். ஒரு வாணலியைக் காயவைத்து, எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிப்பவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.
  • பிறகு,நறுக்கிய காய்கள், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின், அரைத்த விழுதையும் போட்டு, பச்சை வாசனை போகக் கிளறி, 4 அல்லது 5 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். சேர்ந்தாற்போல வெந்ததும் இறக்கி பரிமாறவும். இதுதான் செட்டிநாட்டு தெரக்கல். (கேரட், பட்டாணி, பட்டர் பீன்ஸ சேர்த்தும் செய்யலாம்).

Nutrition

Serving: 100g | Calories: 115kcal | Carbohydrates: 7.92g | Protein: 2.45g | Fat: 7.82g | Saturated Fat: 0.11g | Potassium: 382mg | Fiber: 5.71g | Calcium: 39.27mg | Iron: 0.8mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

3 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

14 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

20 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

23 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

23 மணி நேரங்கள் ago