Advertisement
அசைவம்

இந்த குளிர் காலத்திற்கு தொண்டைக்கு இதமான ருசியான சிக்கன் சூப் இந்த முறையில் செய்து அசத்துங்கள்!

Advertisement

காய்கறி சூப் ,மட்டன் சூப் கீரை சூப், சிக்கன் சூப், என சூப்பில் பல வகைகள் உண்டு. இந்த சூப் நாம் குடிக்கும் பொழுது நமக்கு தேவையான உடல் வலிமை கிடைக்கும். இந்த சூப் ல நம்ம எந்த சூப் குடிச்சாலும் நம்மளுக்கு ரொம்பவே ஆரோக்கியமானது. வாய்ப்புண் எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் எல்லாத்துக்குமே இந்த சூப் குடிச்சா சரியாகும். பொதுவா இந்த மழைக்காலத்தில் எல்லாருக்கும் இருமல் சளின்னு வந்துட்டே இருக்கும் அதுக்கு நம்ம முதல்ல ஹாஸ்பிடலுக்கு போகாம வீட்டிலேயே நிறைய கை வைத்தியங்கள் செய்வோம்.

அந்த கை வைத்தியங்கள் ஒன்னு தான் இந்த மாதிரி சூப் செஞ்சு குடிக்கிறது. இந்த சூப் ல மிளகுத்தூள் கொஞ்சம் அதிகமா சேர்த்து குடிக்கும் போது நமக்கு இருக்க சளி இருமல் எல்லாமே பறந்து போயிடும். அந்த அளவுக்கு ரொம்பவே ஆரோக்கியமான பல பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கக்கூடிய இந்த சூப் நம்ம பெரும்பாலும் கடையில வாங்கி குடிச்சா தான் நல்லா இருக்கும்னு நினைப்போம். ஆனா வீட்டிலேயே கூட நம்ம ஈஸியா இந்த சூப் செஞ்சு குடிக்கலாம். அதுல இன்னைக்கு நம்ம சிக்கன் சூ ப் எப்படி செஞ்சா கடையில விக்கிற மாதிரி சூப்பரா இருக்கும்னு தான் பாக்க போறோம்.

Advertisement
Advertisement

சிக்கன் சூப் குடிச்சாலும் மழை காலத்துல மட்டும் இல்லாம எல்லா நேரங்களிலும் ஏற்பாடுற சாரி இருமல் எல்லா பிரச்சினைகளும் சரியாயிடும். பொதுவா குழந்தைகளுக்கு இந்த சூப் செஞ்சு கொடுக்கிறது ரொம்பவே நல்லது. அவங்க பிடிக்கலைன்னு சொன்னா கூட அவங்களுக்கு புடிச்ச மாதிரி இப்போ நான் சொல்ல போற மாதிரி செஞ்சு கொடுங்க அவங்க ரொம்பவே விரும்பி குடிப்பாங்க இப்ப வாங்க இந்த சிக்கன் சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சிக்கன் சூப் | Chicken Soup Recipe In Tamil

Print Recipe
கை வைத்தியங்கள் ஒன்னு தான் இந்த மாதிரி சூப் செஞ்சு குடிக்கிறது. இந்த சூப் ல மிளகுத்தூள் கொஞ்சம்அதிகமா சேர்த்து குடிக்கும் போது நமக்கு இருக்க சளி இருமல் எல்லாமே பறந்து போயிடும்.
Advertisement
அந்த அளவுக்கு ரொம்பவே ஆரோக்கியமான பல பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கக்கூடியஇந்த சூப் நம்ம பெரும்பாலும் கடையில வாங்கி குடிச்சா தான் நல்லா இருக்கும்னு நினைப்போம். ஆனா வீட்டிலேயே கூட நம்ம ஈஸியா இந்த சூப் செஞ்சு குடிக்கலாம். அதுல இன்னைக்கு நம்ம சிக்கன் சூ ப் எப்படிசெஞ்சா கடையில விக்கிற மாதிரி சூப்பரா இருக்கும்னு தான் பாக்க போறோம்.
Course Appetizer
Cuisine tamil nadu
Keyword Chicken soup
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 381

Equipment

  • 1 அகலமான பாத்திரம்

Ingredients

  • 250 கிராம் சிக்கன்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 பச்சை மிளகாய்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 கப் தண்ணீர்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லித்தூள்
  • 1 டீஸ்பூன் உப்பு
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 பட்டை
  • 1 பிரியாணி இலை
  • 1 ஏலக்காய்
  • 2 கிராம்பு
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • கருவேப்பிலை சிறிதளவு
  • மல்லி இலைகள் சிறிதளவு

Instructions

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு மற்றும் சீரகத்தை போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  •  
    பிறகு ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, ஏலக்காய் கிராம்பு அனைத்தையும் போட்டு தாளித்து விட வேண்டும்.அதன் பின்பு பெரிய வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்
  • பின்பு மஞ்சள் தூள் மல்லி தூள் ,உப்பு, அரைத்து வைத்துள்ள மிளகு சீரகத்தூள் அனைத்தையும் சேர்த்து கிளறவும்.
     
  •  சிக்கனை நன்றாக சுத்தம் செய்து அதில் போட்ட நன்றாக வதக்க வேண்டும். வதங்கிய பிறகு 3 கப் தண்ணீர் மல்லி இலைகள் சேர்த்து மூன்று விசில் விட்டு இறக்க வேண்டும்.
  • இப்பொழுது அருமையான மணக்க மணக்க சுட சுட சிக்கன் சூப் தயார்.இந்த மழைக்காலத்தில் நீங்களும் செய்த குடித்து பாருங்கள் அருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 381kcal | Carbohydrates: 3g | Protein: 21g | Fat: 1g | Sodium: 6mg | Potassium: 709mg | Fiber: 12g | Calcium: 2mg

இதையும் படியுங்கள் : ருசியான காடை மஞ்சூரியனை ஈஸியாக இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Advertisement
Prem Kumar

Recent Posts

பிரெஞ்ச் ப்ரைஸ் மாதிரி கேரட் ப்ரைஸ் என்று ஒரு தடவை அசத்துங்க!

இப்பலாம் குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கிற பிரெஞ்சு ப்ரைஸ் kfc சிக்கன் ,சிக்கன் ரோல், அப்படின்னா இந்த மாதிரி ஐட்டங்கள் தான்…

2 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தால் ஏற்படும் நன்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியை அட்சய திருதியையாக கொண்டாடுகிறோம். அத்தகைய அட்சய திருதியை அன்று…

2 மணி நேரங்கள் ago

மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த வாழைப்பழ குழி பணியாரம் செய்து கொடுங்கள் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும்!!

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…

2 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2024 என்ன பொருள் வாங்கி வைத்து, எந்த முறையில் பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் ?

இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

5 மணி நேரங்கள் ago

ரொம்பவே சிம்பிளான ஒரு வர மிளகாய் துவையல் எப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

வீட்டில் வேலை பார்த்து பார்த்து ரொம்ப சலிச்சு போனவங்க இட்லி தோசைக்கு பேச எந்த சட்னியும் அரைக்காமல் இந்த மாதிரி…

6 மணி நேரங்கள் ago

ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவையான மற்றும் மொறு மொறுவென்ற இந்த நெத்திலி மீன் ஃப்ரை செய்து பாருங்கள் இனி இப்படித்தான் மீன் வறுவல் செய்வீர்கள்!!

ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ரோட்டுக்கடை…

7 மணி நேரங்கள் ago