Advertisement
அசைவம்

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான சிக்கன் டாக்கோஸ் இப்படி செய்து பாருங்க! அட்டகாசமான சுவையில் இருக்கும்!

Advertisement

வெளிநாடுகள்ல ரொம்பவே ஃபேமஸா இருக்கும் டாக்கோஸ் அப்படிங்கிற உணவு இந்தியாவில் இப்ப ரொம்ப ஃபேமஸ் ஆயிட்டு வருது. அந்த டாக்கோஸ் எப்படி வீட்ல ரொம்பவே  எளிமையா செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.  சப்பாத்தி ரோல் மாதிரி இருக்கும் அப்படின்னு கூட நம்ம இதை சொல்லிக்கொள்ளலாம்.

நிறைய வெரைட்டி டாக்கோஸ் இருக்கு ஆனால் நம்ம இப்ப பண்ண போறது சிக்கன் டாக்கோஸ்.சிக்கனில் இந்த டாங்கோஸ் பண்றதால எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிச்ச மாதிரி இந்த  டாக்கோஸ் இருக்கும். எல்லா குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்த உடனே அவங்களுக்கு கொடுக்கறதுக்கு செய்து வச்சிருந்தோம்னா அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிட வாங்க. சிக்கன் எல்லாருக்கும் பிடிக்கும்இந்த சிக்கனை வைத்து என்ன உணவு செய்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த டாக்கோஸ மைதா மாவுல தான் நம்ம செய்ய போறோம்.

Advertisement

ஆனால் உங்களுக்கு மைதா மாவு வேணாம்னா கோதுமை மாவுல கூட செஞ்சுக்கலாம். இது நம்மளோட விருப்பம் தான் இந்த சுவையான டாக்கோஸ் எல்லாருமே சாப்பிடலாம். இது ரொம்பவே ஹெல்தியான உணவு தான். காரணம் இத நம்ம தோசை கல்லில் தான் சுட்டு எடுக்க போறோம் அதனால எந்த ஆரோக்கிய குறைபாடும் கிடையாது. சாப்பிடறதுக்கு ரொம்பவே ஆரோக்கியமான உணவு தான் இந்த டாக்கோஸ் இருக்கும். சரி வாங்க இந்த சுவையான சிக்கன் டாக்கோஸ எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.

சிக்கன் டாக்கோஸ் | Chicken Tacos Recipe In Tamil

Print Recipe
நிறைய வெரைட்டி டாக்கோஸ் இருக்கு ஆனால் நம்ம இப்ப பண்ண போறது சிக்கன் டாக்கோஸ்.சிக்கனில் இந்த டாங்கோஸ் பண்றதால எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிச்சமாதிரி இந்த  டாக்கோஸ் இருக்கும். எல்லா குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்த உடனே அவங்களுக்கு கொடுக்கறதுக்கு செய்து வச்சிருந்தோம்னா அவங்கரொம்பவே விரும்பி சாப்பிட வாங்க. சிக்கன் எல்லாருக்கும் பிடிக்கும்இந்த சிக்கனை வைத்துஎன்ன உணவு செய்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த டாக்கோஸ மைதா மாவுல தான் நம்ம செய்ய போறோம். சரி வாங்க இந்த சுவையான சிக்கன் டாக்கோஸ எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.
Advertisement
Course snacks
Cuisine tamil nadu
Keyword Chicken Tacos
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 128

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கப் மைதா மாவு
  • 1/2 கிலோ சிக்கன்
  • 1 வெங்காயம்
  • 1 குடை மிளகாய்
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் மிளகு தூள்
  • 1 ஸ்பூன் சீரகதூள்
  • 1/2 கப் சீஸ்
  • தக்காளி சாஸ் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் மைதா மாவில் சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து கலந்து விட்டு
    Advertisement
    பிறகு சிறிது சிறிதாக தண்ணீர்சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  •  பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நீலவாக்கில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.
  • பின் அதில் சிக்கன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட்டு அதில் மிளகாய்த்தூள், சீரகத்தூள்,மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து எடுத்து வேக வைத்து மூடி விடவும்.
  •  பிறகு மைதா மாவிலிருந்து மாவை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து சற்றே கனமான சப்பாத்திகள் போல தேய்த்து எடுக்க வேண்டும். அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து சூடானதும் தேய்த்து வைத்துள்ள மைதா மாவு சப்பாத்திகளை அதில் இரண்டு புறமும் லேசாக வேகமாக திருப்பி போட்டுஎடுத்து வைக்கவும்.
  • பிறகு வைத்துள்ள சப்பாத்தி போன்ற வற்றில் தக்காளி சாஸை தடவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் தயார் செய்து வைத்துள்ள சிக்கன் மசாலாவை எடுத்து சப்பாத்திகளின் ஒரு புறத்தில் வைத்து அதன் மேல் வெங்காயம், சீஸ் துருவலை சேர்த்துஅரை வட்ட வடிவமாக மூடிக்கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தயார் செய்து வைத்துள்ள ஸ்டஃப்டு டாக்கோஸ்களை சேர்த்து இரண்டுபுறமும் நன்றாக வெந்து வருமாறு திருப்பிப் போட்டு எடுத்து சூடாக பரிமாறினால் சுவையானசிக்கன் டாக்கோஸ் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 128kcal | Carbohydrates: 3.9g | Protein: 26g | Sodium: 54.8mg | Potassium: 77.95mg | Vitamin A: 29IU | Vitamin C: 60.4mg | Calcium: 24.1mg | Iron: 1.21mg

இதனையும் படியுங்கள் : இந்த குளிர் காலத்திற்கு தொண்டைக்கு இதமான ருசியான சிக்கன் சூப் இந்த முறையில் செய்து அசத்துங்கள்!

Advertisement
Prem Kumar

Recent Posts

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

52 நிமிடங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

2 மணி நேரங்கள் ago

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

6 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

6 மணி நேரங்கள் ago

மாம்பழ மாதுளை மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக,மாதுளை சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

6 மணி நேரங்கள் ago

டிபன் பாக்ஸில் வைத்து கொடுத்து விட ஒரு குடைமிளகாய் சாதம் செய்து கொடுத்தால், அனைத்தும் காலியாகி விடும்!!!

பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு தினமும் சாம்பார் சாதம் ,லெமன் சாதம்,தயிர் சாதம் , புளியோதரை…

8 மணி நேரங்கள் ago