பொதுவா நம்ம சுண்டல் குழம்பு வைக்கும் போது நல்ல காரசாரமா நல்லா கலரா வைப்போம் சென்னா மசாலா வைக்கும் போதும் அதே மாதிரி தான் வைப்போம் ஆனா இன்னைக்கு நம்ம வைக்கப் போற இந்த கடலை கறி குருமா வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த சூப்பரான கடலை கறி ஒரு தடவ வீட்ல செஞ்சு பாத்தீங்கன்னா அதுக்கப்புறம் சென்னா மசாலா மாதிரியே இதையும் அடிக்கடி செய்வீங்க. இந்த வெள்ளை நிற கடலை கறி கேரளாவுல தான் ரொம்ப ரொம்ப பேமஸ். இதுக்கு நம்ம தேங்காய் அரைச்சு ஊத்த தேவை இல்ல வெங்காயமும், தக்காளியும் நல்லா வதக்கி கொண்டைக்கடலையை ஊற வச்சு முந்திரி பருப்பு கூட சேர்த்து அரைச்சு நல்லா திக்கா வெள்ளை நிறத்தில் காரத்துக்கு பச்சை மிளகாய், கரம் மசாலா, மிளகுத்தூள் சேர்த்து சூப்பரா செய்ய போறோம்.
இத புட்டு இடியாப்பம் இட்லி தோசை சப்பாத்தி எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும். ருசியான இந்த கடலை கறியை வீட்டுக்கு விருந்தாளிகள் வரும்போது அவங்களுக்கு செஞ்சு கொடுத்தீங்கன்னா ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிட்டு ரெசிபி கேட்டுட்டு தான் போவாங்க. சுவையான இந்த கிரேவிக்கு நம்ம என்ன செஞ்சு சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும். இந்த கிரேவியோட டேஸ்ட் ரொம்ப ரொம்ப டிஃபரண்டா இருக்கும் சாப்பிட்டு பார்த்தால் உங்களுக்கே புரியும்.
குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ்க்கு சப்பாத்தி செஞ்சு இந்த வெள்ளை குருமா வச்சு கொடுத்து விடுங்க கண்டிப்பா மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வருவாங்க. எப்பவுமே சப்பாத்திக்கு பூரிக்கு ஒரே மாதிரியா, உருளைக்கிழங்கு கிரேவி வைக்காம இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க இந்த புரட்டாசி மாதத்தில் இந்த மாதிரி ஒரு வெஜ் ரெசிப்பி செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பா அசைவம் ஞாபகமே வராது அந்த அளவுக்கு இந்த ரெசிபி சூப்பரா இருக்கும்.
இந்த கடலைக்கறி சாப்பிடுவது உடம்புக்கு ஆரோக்கியமானதும் கூட. உடம்புக்கு ஆரோக்கியமான இந்த கடலை கறிய குழந்தைகளுக்கும் செஞ்சு கொடுத்த அவங்கள ஆரோக்கியமா வச்சுக்கோங்க. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவங்களுக்கு கொடுக்கிறதும் அவங்க உடம்பு ஆரோக்கியத்துக்கு ரொம்ப ரொம்ப நல்லது குழந்தைகளுக்கு இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து அசத்துங்க. இப்ப வாங்க இந்த சுவையான கருப்பு கொண்டை கடலை வெள்ளை குருமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கொண்டைக்கடலை வெள்ளை குருமா | Chickpeas White Gravy Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 50 கி கருப்பு கொண்டைக்கடலை
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 1 பிரியாணி இலை
- 1 டேபிள் ஸ்பூன் சோம்பு தூள்
- 1 டீஸ்பூன் கரம் மசாலா
- 1 கொத்து கறிவேப்பிலை
- கொத்தமல்லி சிறிதளவு
- 4 பச்சை மிளகாய்
- 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
- 7 முந்திரி பருப்பு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் கருப்பு கொண்டை கடலையை குக்கரில் சேர்த்து உப்பு போட்டு நான்கு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு ஒரு கடாயில் என்னை சேர்த்து பட்டை கிராம்பு, ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
- பிறகு நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு சோம்பு தூள் கரம் மசாலா தேவையான அளவு உப்பு மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்ததும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வேக வைத்த கொண்டைக்கடலையில் இருந்து சிறிதளவு எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- அந்த விழுதையும் கொண்டை கடலையையும் கடாயில் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- பிறகு நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கிளறி இறுதியாக கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான கருப்பு கொண்டைக்கடலை வெள்ளை குருமா தயார்.