குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டீ டைம் சாக்லேட் கேக் ஒருமுறை செய்து பாருங்களேன்!!!

சாக்லேட் என்று கூறினால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் இந்த சாக்லேட். இந்த சாக்லேட்டை கொண்டு பல விதமான ஸ்வீட் வகைகளும் ஐஸ்கிரீம் வகைகளையும் கேக் வகைகளையும் நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். கேக் என்றால் குழந்

By Prem Kumar · 13/4/2024

சாக்லேட் என்று கூறினால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் இந்த சாக்லேட். இந்த சாக்லேட்டை கொண்டு பல விதமான ஸ்வீட் வகைகளும் ஐஸ்கிரீம் வகைகளையும் கேக் வகைகளையும் நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். கேக் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது.

இனிமேல் குழந்தைகள் அப்படி அடம்பிடித்தால் நீங்கள் பேக்கரிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே சாக்லேட் கேக் செய்து அசத்துங்கள். பொதுவாக வீடுகளில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேரத்திற்கு சுவையான டீயுடன் ஸ்நாக்ஸ் வகைகள் எடுத்து கொள்வார்கள். அந்த வகையில் இது போன்ற நேரங்களில் வீட்டிலிருக்கும் அனைவருக்கும் ஆரோக்கியம் தரும் வகையில் வீட்டிலுள்ள பொருட்களை வைத்து ஸ்நாக்ஸ் செய்யலாம். இவைகளை அனைவரும் விரும்பி சாப்பிடுவர் என்று கூறினாலும் குறிப்பாக குழந்தைகள் சாக்லேட் கேக்கினை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் எவ்வளவு கொடுத்தாலும் சலிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். மீண்டும் வேண்டும் என்று கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கேக் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஏற்றவை. இந்த கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள், நிச்சயதார்த்தம், ஆண்டுவிழா போன்ற தினங்களுக்கும், சில வகையான பண்டிகை நாட்கள் அதாவது கிருத்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களுக்கும் வெட்டி மகிழலாம்.

இதனையும் படியுங்கள் : சூப்பரான லாவா கேக் இப்படி ரெம்ப சுலபமாக வீட்டிலயே செஞ்சு பாருங்க அஞ்சு நிமிஷத்துல எல்லாமே காலி ஆகிவிடும்!

Recipes AMP · Quick view
View full