Advertisement
ஸ்நாக்ஸ்

எவ்வளவு செய்தாலும் காலியாகும் ருசியான குக் வித் கோமாளி ரெசிபி இப்படி செய்து பாருங்க!

Advertisement

சாக்லேட், ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து செய்யும் இந்த சாக்லேட் சமோசா வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற இனிப்பு வகைகளில் ஒன்று. இது மிகச்சிறந்த வட இந்திய சிற்றுண்டி ஒரு இனிப்பாக உள்ளது! குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான, சுவையான சாக்லேட் ஃபில்லிங் கொண்ட சமோசா, உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு விழாக் காலங்களில் நீங்கள் செய்து கொடுங்கள் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சாக்லேட் சமோசாவை இனிப்பாகவோ அல்லது தீபாவளி விருந்துக்கு ஸ்வீட் ஸ்நாக்காகவோ தயார் செய்யலாம். இதனை உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு அளித்தால் கடைசி வரை உங்கள் விருந்தினர்கள் உல்லாசமாக இருப்பதைக் காணலாம்.

சாக்லேட் சமோசா | Chocolate Somasa Recipe In Tamil

Print Recipe
சாக்லேட், ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து செய்யும் இந்த சாக்லேட் சமோசா வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற இனிப்பு வகைகளில் ஒன்று. இது மிகச்சிறந்த வட இந்திய சிற்றுண்டி ஒரு இனிப்பாக உள்ளது! குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான, சுவையான சாக்லேட் ஃபில்லிங் கொண்ட சமோசா, உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு விழாக் காலங்களில் நீங்கள் செய்து கொடுங்கள் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சாக்லேட் சமோசாவை இனிப்பாகவோ அல்லது தீபாவளி விருந்துக்கு ஸ்வீட் ஸ்நாக்காகவோ தயார் செய்யலாம்.
Course snacks
Cuisine Indian, north india
Keyword Achovies Avial, samosa
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 216

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 வாணலி
  • 1 கரண்டி
    Advertisement

Ingredients

  • 1/2 கப் மைதா
  • 1/4 டீஸ்பூன் உப்பு
  • 1/4 கப் நெய்
  • 1/4 கப் ரவா
  • 1/4 கப் தேங்காய்
  • 1/4 கப் பொட்டுக்கடலை
  • 1 டேபிள் ஸ்பூன் பாதாம்
  • 1 டேபிள் ஸ்பூன் பிஸ்தா
  • 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • 1/4 டீஸ்பூன் ஏலக்காய்
  • 100 கிராம் சாக்லேட்
  • எண்ணெய் தேவையானஅளவு

Instructions

  • ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சிறிதளவு உப்பு, நெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும்.
    Advertisement
  • இந்த மாவை 10 நிமிடங்களுக்கு அப்படியே மூடி வைத்து விடவும்.
  • பின் ஒரு கடாயில் நெய் விட்டு ரவாவை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து ஒரு பவுளில் எடுத்து வைக்கவும்.
  • பின்னர் அதே கடாயில் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் சாக்லேட்டை உருக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
  • பின்னர் ரவாவுடன் பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், சர்க்கரை, பாதாம், பிஸ்தா, ஏலக்காய் தூள் மற்றும் உருக்கிய சாக்லேட் சேர்த்து கலந்து விடவும்.
  • மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து அதனை முக்கோன வடிவில் சுருட்டி கொள்ளவும்.
  • அதனுள் உருக்கி வைத்த சாக்லேட் கலவையை போட்டு சமோசாவில் ஓரங்களில் தண்ணீர் கொண்டு அதன் முனைகளை ஒட்டி வைக்கவும்.
  • அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான சாக்லேட் சமோசா ரெடி.

Nutrition

Serving: 600g | Calories: 216kcal | Carbohydrates: 25g | Protein: 1.8g | Fat: 13.6g | Saturated Fat: 6.7g | Sodium: 79mg | Potassium: 372mg | Fiber: 2.6g | Sugar: 7.1g | Vitamin A: 195IU | Calcium: 6.5mg | Iron: 0.6mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

1 மணி நேரம் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

12 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

14 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

22 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago