Advertisement
சைவம்

சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ருசியான சௌசௌ கிரேவி இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

சப்பாத்திக்கு மட்டுமல்ல, தோசை, பூரி, வெள்ளை நிற புலாவ், இவைகளுக்கு தொட்டு சாப்பிடவும் இந்த சௌசௌ கிரேவி அவ்வளவு சுவையாக இருக்கும். எப்போதும் வெஜிடபிள் குருமா தானே செய்வீங்க. கொஞ்சம் வித்தியாசமா இந்த சௌசௌ கிரேவியை செய்து சாப்பிட்டு பாருங்களேன். சௌசௌவில் கால்சியம் சத்துகள் காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற செய்கிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு சௌசௌ காயை உண்ண கொடுக்கலாம். வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் சக்தி இதற்கு உண்டு. உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சமநிலையில் வைத்துக்கொள்ளும்சௌசௌ பிடிக்காதவர்கள் கூட, இந்த கிரேவியை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள்.

 எப்போதும் போல இல்லாமல் வித்தியாசமான கிரேவி செய்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது இந்த சமையல் குறிப்பு உங்களுக்கு கை கொடுக்கும். சௌசௌ நீர்ச்சத்து நிறைந்த ஒரு காய்கறி. இந்த  நம்முடைய உணவோடு இதை சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Advertisement

எப்போதும் போல சௌசௌ குழம்பு, சௌசௌ கூட்டு, செய்யாமல் இந்த மசாலாவை  செய்து பாருங்கள்.இது சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். சப்பாத்திக்கு மட்டும் இல்லாமல், சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். வாங்க நேரத்தைக் கடத்தாமல் வித்தியாசமான இந்த சௌசௌ கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம்.

சௌசௌ கிரேவி | Chow Chow Gravy Recipe In Tamil

Advertisement
Print Recipe
வித்தியாசமான கிரேவி செய்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது இந்த சமையல் குறிப்பு உங்களுக்கு கைகொடுக்கும். சௌசௌ நீர்ச்சத்து நிறைந்த ஒரு காய்கறி. இந்த  நம்முடைய உணவோடு இதை சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்குமிகவும் நல்லது. எப்போதும் போல சௌசௌ குழம்பு, சௌசௌ கூட்டு, செய்யாமல் இந்த மசாலாவை  செய்து பாருங்கள்.இது சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். சப்பாத்திக்குமட்டும் இல்லாமல், சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். வாங்க நேரத்தைக் கடத்தாமல்வித்தியாசமான இந்த சௌசௌ கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம்
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Chow Chow Gravy
Prep Time 5 minutes
Cook Time 15 minutes
Servings 4
Calories 35

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 200 கிராம் சௌசௌ
  • 1 வெங்காயம்
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 1 கொத்து கருவேப்பிலை

அரைக்க

  • 50 கிராம் வேர்க்கடலை
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 2 கிராம்பு
  • 1 சிறிய துண்டு பட்டை
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

Instructions

  • முதலில் சௌசௌ எடுத்து, தோல் சீவி அதை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மீடியம் சைஸில் இருக்கும் 1 வெங்காயத்தை எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.
  • அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலை – 50 கிராம், சோம்பு – 1/2 ஸ்பூன், கிராம்பு – 2, பட்டை – 1 சிறிய துண்டு, போட்டு முதலில் தண்ணீர் ஊற்றாமல் பொடித்துக் கொண்டு, அதன் பின்பு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுவும் அப்படியே இருக்கட்டும்.
  • இப்போது கடாயை அடுப்பில் வைத்து கிரேவியை தாளித்து விடலாம். கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, சோம்பு – 1/2 ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் சேர்த்து, நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும், இஞ்சி பூண்டு விழுது, கருவேப்பிலை – 1 கொத்து, நறுக்கி வைத்திருக்கும் சௌசௌகளை இதில் சேர்த்து, 2 நிமிடம் போல வதக்கி விட்டு, 1/4 கப் அளவு தண்ணீரை ஊற்றி, ஒரு மூடி போட்டு சௌசௌவை வேக வையுங்கள். 5 நிமிடம் சௌசௌ வேகட்டும்.
  • தண்ணீர் எல்லாம் சுண்டி சௌசௌ வெந்து வந்ததும் மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன், சேர்த்து சௌசௌவை நன்றாக வதக்கி விட்டு, மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை ஊற்றி கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, கலந்து விட்டு மூடி போட்டு மீண்டும் 5 நிமிடங்கள் மிதமான தீயில் கிரேவியை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
  • மீதம் வேக வேண்டிய சௌசௌ, அறவையில் இருக்கும் பச்சை வாடை, அனைத்தும் நீங்கி கிரேவி கொதித்து வந்தவுடன், அடுப்பை அணைத்துவிட்டு இதில் கொத்தமல்லி தழைகளை தூவி சுடச்சுட ருசித்து பாருங்கள். இதனுடைய வாசனையே அவ்வளவு சூப்பராக இருக்கும்.
  • சுடச்சுட சப்பாத்தி, நான், பூரி, இவைகளுக்கு இது ஒரு வித்தியாசமான சைடிஷ்.

Nutrition

Serving: 100g | Calories: 35kcal | Carbohydrates: 8.22g | Protein: 0.76g | Sodium: 56mg | Potassium: 235mg | Fiber: 3g | Calcium: 31mg | Iron: 0.34mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

2 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

12 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

12 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

13 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

14 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

17 மணி நேரங்கள் ago