- Prep
- 5 min
- Cook
- 5 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast, LUNCH
செளசௌ கிரேவி வீட்டில் செய்து பாருங்கள், நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும். சூடான சாதத்திற்கு மட்டும் இல்லை, சப்பாத்தி, இட்லி தோசைக்கும் அருமையாக இருக்கும். சௌசௌவில் கால்சியம் சத்துகள் காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற செய்கிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு சௌசௌ காயை உண்ண கொடுக்கலாம். வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் சக்தி இதற்கு உண்டு. உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சமநிலையில் வைத்துக்கொள்ளும்.
மதிய உணவுகளுக்கு குழம்பு, , கூட்டு, பொரியல் என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கிரேவி, செய்தல், தனியாக பக்க உணவாக வறுவல்,பொரியல் செய்ய தேவை இல்லை . நமக்கு புடித்த உணவை சுவையை நன்றாக இருக்கும் என்று தெரிதல் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம்.
இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். என்ன கூட்டு, குழம்பு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக,இந்த மாதிரி ஒரு க்ராவ்ய் சுலபமாக செய்து விடலாம். இட்லி தோசைக்கு சைடிஷ் ஆக செய்யப்படும் சட்னிகளில் பலவகை உண்டு. அதற்கு பதில் இந்த செளசெள கிரேவி செய்தல் போதும் வித்தியாசமான சுவையில் இருக்கும். ஆமாங்க இந்த கிரேவி சௌசௌ வெச்சி தான் செய்யப் போறோம்.
Ingredients
Method
தேவையான பொருட்களை தயாராக. எடுத்து வைக்கவும் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சௌசௌவை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள சௌசௌ நுண்டுகளை சேர்க்கவும்.இதனுடன் மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து பிரட்டவும். காய் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
சௌசௌ நன்கு வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.பின்னர் உப்பு சரிப்பார்த்து, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
சுவையான சௌசௌ கிரேவி தயார்.






