ஒருமுறை இந்த கொத்தவரங்காய் மோர் குழம்பை செய்து கொடுத்து பாருங்கள். இனி வீட்டில் உள்ளவர்கள் மறுபடியும் இதைச் செய்யச் சொல்லி உங்களைத் தொல்லை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்
தினமும் மதிய உணவிற்காக ஏதேனும் ஒரு குழம்பு, பொரியல் என்று சமைத்து வைக்கப்படுகிறது. ஆனால் இன்றைய வெப்பமான சூழ்நிலையில் காரமான குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவை இன்னும் நமது உடலில் உஷ்ணத்தை அதிகப்படுத்துகிறது. அதற்காக உணவுடன் தயிர் சேர்த்துக் கொள்வது என்பது நமது உடல
தினமும் மதிய உணவிற்காக ஏதேனும் ஒரு குழம்பு, பொரியல் என்று சமைத்து வைக்கப்படுகிறது. ஆனால் இன்றைய வெப்பமான சூழ்நிலையில் காரமான குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவை இன்னும் நமது உடலில் உஷ்ணத்தை அதிகப்படுத்துகிறது. அதற்காக உணவுடன் தயிர் சேர்த்துக் கொள்வது என்பது நமது உடல் சூட்டை சமநிலையில் வைக்கிறது. அதற்காக இந்த மோர் குழம்பை அடிக்கடி சிறிதளவாவது சாதத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மோர் குழம்புடன் கொத்தவரங்காய் சேர்த்து செய்யும் மோர் குழம்பு மிகவும் சுவையாக இருக்கிறது. கல்யாண வீடுகளிலும், விசேஷ பந்தியிலும் இதுபோன்ற மோர் குழம்பு இடம்பெறுகிறது. வாருங்கள் இந்த சுவையான கொத்தவரங்காய் மோர் குழம்பை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். வித்தியாசமான முறையில் ‘கொத்தவரங்காய் மோர் குழம்பு’ இப்படி ஒரு முறை வச்சு பாருங்க! அதற்குப் பிறகு இதே முறையில் தான் செய்து பாருங்களேன், அவ்ளோ ருசியா இருக்கும்.
மோர் குழம்பு என்றாலே முதலில் தேர்ந்தெடுக்கும் காய் வெண்டைக்காயை ஆக தான் இருக்கும். வெண்டைக்காய் சேர்த்து செய்த மோர் குழம்பு அவ்வளவு அட்டகாசமான ருசியில் இருக்கும். அந்த வகையில் இந்த முறையில் கொத்தவரங்காய் மோர் குழம்பு செய்தால் இன்னும் கூடுதல் சுவை நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். மேலும் இந்த மோர் குழம்பு செய்வதற்கு அதிகம் பொருட்களும் தேவைப்படுவதில்லை. சட்டென பத்தே நிமிடத்தில் எல்லா வேலைகளையும் செய்து முடித்து விடலாம். வித்தியாசமான முறையில் கொத்தவரங்காய் சேர்த்து செய்யப்படும் இந்த கொத்தவரங்காய் மோர் குழம்பு நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும், ட்ரை பண்ணி பாருங்க! அதை எப்படி செய்வது? என்று தெரிஞ்சுக்க தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.