- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Snack
நாம் பிள்ளையாருக்கு படைக்கும் தேங்காய் மோதகம் விசேஷ காலங்களில் மட்டும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாலை வேலைகளில் பள்ளி சென்று வரும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் உடலுக்கும் சத்தானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
இதை எளிமையாக வேகமாக செய்து விடலாம். அதே நேரம் சாப்பிடுவதற்கும் சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த தேங்காய் மோதகம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் ராகி பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி ?
Ingredients
Method
முதலில் கோதுமை மாவு மற்றும் மைதா மாவை சல்லடை வைத்து சலித்து ஒரு பாத்திரத்தில் போட்டு, வெதுவெதுப்பான நீர் மற்றும் நெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் வெல்லம், ஏலக்காய் மற்றும் வதக்கி வைத்துள்ள தேங்காயைப் போட்டு, கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக சப்பாத்தி தேய்பதில் தேய்த்து, அதன் நடுவே தேங்காய் கலவையை சிறிது வைத்து மூட வேண்டும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான தேங்காய் மோதகம் தயார்.






