Advertisement
ஸ்நாக்ஸ்

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான கிரிஸ்பி பைங்கன் இப்படி மிஸ் பண்ணமா ட்ரை பண்ணி பாருங்கள்!

Advertisement

மாலை நேர சிற்றுண்டி அப்படின்னு சொன்னா நமக்கெல்லாம் ஞாபகம் வருது வடை, பஜ்ஜி, சம்சா, போண்டா, பாயாசம் இல்லையா ஏதாவது பயிறு சுண்டல் அந்த மாதிரி சாப்பிடுவோம். வட மாநிலங்களில் இந்த மாலை நேர சிற்றுண்டிக்கு அவங்க செய்ற ஒரு மாலை நேர சிற்றுண்டி தான் கிரிஸ்பியான பைங்கன் அதாவது கத்தரிக்காய் வறுவல்னு சொல்லலாம். அப்படி கத்திரிக்காயை வைத்து சுவையான ஒரு பைங்கன் செய்ய போறோம்.

அது கிரிஸ்பியா நல்ல மொறு மொறுன்னு வாயில வச்சதும் அதை அப்படியே நமக்கு நல்ல ஒரு பிளேவரோட உள்ள இறங்கும். இப்படி சுவையா அந்த கத்திரிக்காய் வச்சு மழை நேரத்தில் நல்ல மொறு மொறுன்னு இந்த பைங்கன் செய்து சாப்பிட்டோம்னா அப்படி ஒரு டேஸ்ட்டா இருக்கும். அதுவும் இந்த சீசனுக்கு சூடா இது சாப்பிடும் போது ரொம்பவே நல்லா இருக்கும். இந்த மாதிரி சுவையான பைங்கன் வந்து வட மாநிலங்களில் ரொம்பவே ஃபேமஸான ஒரு மாலை நேர சிற்றுண்டி. சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும்.

Advertisement

அந்த அளவுக்கு சுவையாக இருக்கும் விருப்பம் உள்ளதாகவும் இருக்கும். கத்திரிக்காய் நல்லா பெரியதாக வாங்கனும் அப்போது தான் கட் பண்ணும் போது நல்ல வட்ட வடிவமாக வரும் அதுல நம்ம செய்யும்போதும் நல்ல சாப்பிடுவதற்கு டேஸ்ட்டா இருக்கு. இந்த ரொம்பவே சுவையான பைங்கன் எப்படி வீட்ல ரொம்ப சுலபமா செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம் இது செய்யறது ரொம்பவே ஈஸி. இந்த சுவையான பைங்கனை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாமா வாங்க.

கிரிஸ்பி பைங்கன் | Crispy Baingan Recipe in Tamil

Print Recipe
வட மாநிலங்களில் இந்த மாலை நேர சிற்றுண்டிக்கு அவங்க செய்ற ஒரு மாலை நேர சிற்றுண்டி தான் கிரிஸ்பியான பைங்கன் அதாவது கத்தரிக்காய் வறுவல்னு சொல்லலாம். அப்படி கத்திரிக்காயை வைத்து சுவையான ஒரு பைங்கன் செய்ய போறோம். அது கிரிஸ்பியா நல்ல
Advertisement
மொறு மொறுன்னு வாயில வச்சதும் அதை அப்படியே நமக்கு நல்ல ஒரு பிளேவரோட உள்ள இறங்கும். இப்படி சுவையா அந்த கத்திரிக்காய் வச்சு மழை நேரத்தில் நல்ல மொறு மொறுன்னு இந்த பைங்கன் செய்து சாப்பிட்டோம்னா அப்படி ஒரு டேஸ்ட்டா இருக்கும்.அதுவும் இந்த சீசனுக்கு சூடா இது சாப்பிடும் போது ரொம்பவே நல்லா இருக்கும். இந்த மாதிரி சுவையான பைங்கன் வந்து வட மாநிலங்களில் ரொம்பவே ஃபேமஸான ஒரு மாலை நேர சிற்றுண்டி.
Course
Advertisement
snacks
Cuisine north india
Keyword Brinjal Chops, brinjal chutney, kathirikai gravy, Kathirikai kothu, milagu kathirikai
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 people
Calories 150
Cost 100

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Ingredients

  • 2 கத்திரிக்காய் பெரியது
  • 2 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் கரமசாலா
  • 1 ஸ்பூன் சாம்பார் பொடி
  • 1 கப் ரவை
  • 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • கத்தரிக்காய்களை சுத்தம் செய்து பின்பு சற்றே தடிமனாக வில்லைகளாக அவற்றை நறுக்கி எடுத்து வைத்து தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு விழுத, காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், சாம்பார் பொடி, உப்பு, பச்சை மிளகாய், எலுமிச்சை பழச்சாறு இவற்றை சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு இந்த மசாலாவை கத்திரிக்காய்களில் இரண்டு புறமும் நன்றாக பூசவும் பின்பு அவற்றை பத்து நிமிடங்கள் அப்படியே ஊற வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் ரவையைக் கொட்டி அதோடு சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். மசாலா தடவிய கத்தரிக்காய்களை ரவையில் பிரட்டி எடுத்துகொள்ளவும்.
  • அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கத்தரிக்காய் துண்டுகளை ஒவ்வொற்றையும் வைத்து இருபுறமும் மொறுமொறுப்பாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • வறுத்த கத்தரிக்காய் மீது கொத்தமல்லி தழையை தூவி சூடாக பரிமாறினால் சுவையான பைங்கன் தயார்.

Nutrition

Calories: 150kcal | Carbohydrates: 12g | Protein: 6g | Fat: 15g
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

1 மணி நேரம் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

10 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

11 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

12 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

13 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

16 மணி நேரங்கள் ago