- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish, thuvayal
சுட சுட சாதத்துல இந்த மாதிரி ஒரு தடவை பருப்பு துவையல் செஞ்சு கூட நல்லெண்ணெய் இல்லனா நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சூப்பரா இருக்கும். ஒரு சில சமயத்துல வீட்ல குழம்பு கூட்டு பொரியல் இதெல்லாம் வைத்து சாப்பிடுவதற்கு போரடிக்கும் அந்த மாதிரி சமயத்துல இப்படி சிம்பிளா துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அவ்வளவு சுவையா இருக்கும். இந்த பருப்பு துவையல ரசம் சாதம் கூட வச்சு சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும். இந்த பருப்பு துவையல் மட்டும் இருந்துச்சுன்னா ரெண்டு தட்டு சாதம் கூட சாப்பிடலாம். பழைய கஞ்சிக்கும் சுடு கஞ்சிக்கும் கூட இந்த பருப்பு துவையல் அவ்ளோ ருசியா இருக்கும்.
இத சாதத்துக்கு மட்டுமில்லாம இட்லி தோசை சப்பாத்திக்கும் கூட சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். சுவையான இந்த பருப்பு துவையல் ஒரு தடவை செஞ்சுட்டீங்க அப்படின்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. உங்க வீட்ல இருக்கக்கூடிய எல்லாருக்குமே இந்த ரெசிபி கண்டிப்பா ரொம்ப பிடிக்கும். ரொம்ப சிம்பிளா இருந்தாலும் சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும். இந்த பருப்பு துவையல்ல சாதம் போட்டு கிளறி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துவிடலாம்.
சைடு டிஷ் கூட தேவைப்படாது. குழந்தைகள் கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க. இதுல அதிக காரம் இருக்காது. அதனால வேண்டாம்னு சொல்லாம சாப்பிட்டு வருவாங்க. சில சமயங்களில் சமையல் செய்ததற்கு ரொம்ப லேட் ஆயிடுச்சு அப்படின்னா அந்த மாதிரி சமயத்துல இந்த ஈஸியான பருப்பு துவையல் செஞ்சு பாருங்க. சீக்கிரத்துல வேலை முடிஞ்சிடும். அதே சமயத்துல சுவையான ஒரு ரெசிபி சாப்பிட்ட மாதிரியும் இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான பருப்பு துவையல் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுடான ரச சோறுடன் தொட்டுக்க ருசியான புடலங்காய் தோல் துவையல் இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் துவரம் பருப்பு காய்ந்த மிளகாய் பூண்டு பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வறுக்கவும்.
ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் புளி வெல்லம் சேர்த்து தண்ணீர் விட்டு கொரகொரப்பாக கெட்டியாக அரைக்கவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்ததில் சேர்த்தால் சுவையான பருப்பு துவையல் தயார்.





