- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 21 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
எப்பொழுதும் ஒரே மாதிரியான டிபன் செய்யாமல் இது போன்று வித்தியாசமாக தோசை உப்புமா செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. அவ்வளவு சுவையாக இருக்கும்.
எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
தோசையை சிறு சிறு துண்டுகளாக நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து, அத்துடன் காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு நறுக்கிய வெங்காயம், மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தோசையை இத்துடன் சேர்த்து 5 நிமிடம் கிளறி அடுப்பை நிறுத்தவும்.






