- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- LUNCH
மதிய உணவுடன் சுவையான குழம்பை சேர்த்தால் மட்டுமே சாப்பிட சுவையாக இருக்கும். அவ்வாறு அடிக்கடி செய்யும் குழம்புகளாக கார குழம்பு, தக்காளி குழம்பு, வத்தல் குழம்பு தான் அடிக்கடி செய்கின்றனர். காய்கறி சேர்க்காமல் செய்யும் குழம்புகளை விட, காய்கறி சேர்த்து செய்யும் குழம்புகளின் சுவை சற்று அதிகமாகவே இருக்கும். அவ்வாறு காய்கறிகளிலேயே முருங்கைக்காய் வைத்த செய்யும் குழம்புகளுக்கு தனிப்பட்ட சுவையிருக்கும். முருங்கைகாயின் வாசனைக்கே பசி எடுக்க ஆரம்பித்துவிடும். அந்த அளவிற்கு பசியைத் தூண்டும் முருங்கைக்காயை வைத்து குழம்பு வைத்தால், கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அனைத்தும் காலியாகி விடும்.
முருங்கைக் காய் கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. முருங்கை காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். முருங்கைக் காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தம் சுத்தம் அடையும். இந்த முருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு ஒருமுறை இப்படி செய்து பாருங்கள். அவ்வளவு டேஸ்ட்டாக இருக்கும். வாருங்கள் இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Ingredients
Method
கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் முருங்கைக்காயைச் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,
அத்துடன் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கி, தூள் வகைகளைச் சேர்த்துப் பிரட்டவும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிட்டு, பொரித்த முருங்கைக்காயைச் சேர்த்து மூடி வைத்து சிறு தீயில் 3 நிமிடங்கள் வேகவிடவும்.
முருங்கைக்காய் வெந்ததும் தேங்காய்ப் பாலைச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
சுவையான முருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு தயார்.






