Advertisement
சைவம்

முருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு இப்படி செய்து பாருங்க! சுட சுட சாதமுடன் ஊற்றி சாப்பிட ருசியாக இருக்கும்!

Advertisement

மதிய உணவுடன் சுவையான குழம்பை சேர்த்தால் மட்டுமே சாப்பிட சுவையாக இருக்கும். அவ்வாறு அடிக்கடி செய்யும் குழம்புகளாக கார குழம்பு, தக்காளி குழம்பு, வத்தல் குழம்பு  தான் அடிக்கடி செய்கின்றனர். காய்கறி சேர்க்காமல் செய்யும் குழம்புகளை விட, காய்கறி சேர்த்து செய்யும் குழம்புகளின் சுவை சற்று அதிகமாகவே இருக்கும். அவ்வாறு காய்கறிகளிலேயே முருங்கைக்காய் வைத்த செய்யும் குழம்புகளுக்கு தனிப்பட்ட சுவையிருக்கும். முருங்கைகாயின் வாசனைக்கே பசி எடுக்க ஆரம்பித்துவிடும். அந்த அளவிற்கு பசியைத் தூண்டும் முருங்கைக்காயை வைத்து குழம்பு வைத்தால், கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அனைத்தும் காலியாகி விடும்.

முருங்கைக் காய் கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. முருங்கை காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். முருங்கைக் காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தம் சுத்தம் அடையும். இந்த முருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு ஒருமுறை இப்படி செய்து பாருங்கள். அவ்வளவு டேஸ்ட்டாக இருக்கும். வாருங்கள் இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Advertisement
Advertisement

முருங்கைக்காய் தேங்காய்ப்பால் குழம்பு | Drumstick Coconutmilk Gravy

Print Recipe
முருங்கைக்காய் கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. முருங்கை காய் உடலுக்கு நல்லவலுவைக் கொடுக்கும். முருங்கைக் காயை உணவாக எடுத்துகொண்டால்
Advertisement
ரத்தம் சுத்தம் அடையும்.இந்த முருங்கைக்காய் தேங்காய்ப்பால் குழம்பு ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்.அவ்வளவு டேஸ்ட்டாக இருக்கும். வாருங்கள் இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்தபதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Course LUNCH
Cuisine tamilnadu
Keyword Drumstick Coconut Milk Gravy
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 64

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 3 நறுக்கிய முருங்கைக்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி பெரியது
  • 2 பச்சைமிளகாய்
  • 3 பல் பூண்டு
  • 1 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் கப்
  • அரை கப் திக்கான தேங்காய்ப் பால்

தாளிக்க:

  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுந்து
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • உப்பு தேவைக்கேற்ப

Instructions

  • கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் முருங்கைக்காயைச் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,
  • அத்துடன் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கி, தூள் வகைகளைச் சேர்த்துப் பிரட்டவும்.
  • பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிட்டு, பொரித்த முருங்கைக்காயைச் சேர்த்து மூடி வைத்து சிறு தீயில் 3 நிமிடங்கள் வேகவிடவும்.
  • முருங்கைக்காய் வெந்ததும் தேங்காய்ப் பாலைச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
  • சுவையான முருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 64kcal | Carbohydrates: 8.26g | Protein: 9.4g | Fat: 1.4g | Vitamin A: 378IU | Vitamin C: 51.7mg | Calcium: 185mg | Iron: 4mg
Advertisement
Prem Kumar

Recent Posts

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

5 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

5 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

10 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

19 மணி நேரங்கள் ago