- Prep
- 2 min
- Cook
- 5 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Appetizer
முருங்கைக் காயில் இதில் இல்லாத சத்துக்களே கிடையாது வாரம் இரண்டு முறையாவது முருங்கைக் காய் , கீரையை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு சத்துக்கள் இந்த காய்,கீரையில் நிறைந்துள்ளது. இந்த முருங்கைக் காயில் இது வரை சாம்பார், பொரியல், கூட்டு என்று செய்து இருப்போம். இதில் ரசம் வைத்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
முருங்கை ரசம் ஒரு ஆரோக்கியமான தென்னிந்திய ரசம் ஆகும், இது செரிமானத்திற்கு உதவும். முருங்கைகாய் ஊட்டச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக அறியப்படுகிறது மற்றும் இயற்கையான ஆற்றலை அதிகரிக்கும் முருங்கைக் கீரையே நல்ல சத்தான ஆரோக்கியமான பொருள் தான் அத்துடன் மிளகு, சீரகம், பெருங்காயம் எப்படி அத்தனை ஒன்றாக சேர்த்த இந்த முருங்கை காய் ரசத்தை வைத்து சாப்பிட்டு பாருங்கள் அமிர்தம் போலவே இருக்கும். வாங்க அந்த ரசத்தை எப்படி வைப்பது என்று தெரிந்து கொள்ளலாம்
Ingredients
Method
முருங்கைக்காயை நறுக்கவும். துவரம்பருப்பில், மஞ்சள்பொடி, 2 கப் தண்ணீர், நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து வேக விடவும். மிளகு,சீரகம், மல்லி, தட்டி வைக்கவும்.
முருங்கைக்காய் துண்டுகளின் சதையை மட்டும் வழித்து பருப்பு தண்ணீரில் சேர்க்கவும். தக்காளியை [புளியுடன் சேர்த்து கரைக்கவும்.
வாணலியில் கடுகு, வரமிளகாய், தேங்காய் துருவல் தாளிக்கவும். கரைத்த புளி, தக்காளியை ஊற்றவும். 5 நிமிடம் கொதித்ததும் தட்டி வைத்திருக்கும் ரசப்பொடியை சேர்க்கவும்.
5 நிமிடம் கொதித்ததும் பருப்பு தண்ணீர் மீதி முருங்கைக்காய் துண்டுகள் சேர்த்து கொதி வந்ததும் இறக்கி கறிவேப்பிலை மல்லி சேர்க்கவும்.
சுவையான முருங்கைகாய் ரசம் தயார்






