- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
நம்ம நிறைய ரெசிபி செய்யும்போது அதுல எள் சேர்த்து செஞ்சு இருப்போம். இனிப்பா எள் வச்சு எள் உருண்டை செஞ்சு சாப்பிட்டு இருப்போம்.ஆனால் எள் வச்சு இந்த மாதிரி ஒரு துவையல் கண்டிப்பா செஞ்சிருக்கவே மாட்டீங்க. இந்த எள் துவையல் வச்சு கொஞ்சமா சாப்பிட்டா கூட அதோட ஆரோக்கிய நன்மைகள் அதிகமான நமக்கு கிடைக்கும். இந்த துவையல சுடச்சுட சாதத்துக்கு போட்டு சாப்பிடலாம் சுடு கஞ்சிக்கு சைட் டிஷ் ஷா வச்சு சாப்பிடலாம். பழைய கஞ்சிக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். இட்லி தோசைக்கு கூட இதை சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். வெரைட்டி சாதங்கள் ஆன தயிர் சாதத்துக்கும் புளிசாதம் லெமன் சாதத்துக்கும் கூட இந்த துவையல் சைட் டிஷ்க்கு சூப்பரா இருக்கும்.
எப்பவுமே ஒரே மாதிரியா துவையல் அரைச்சு சாப்பிடாம இந்த மாதிரியும் துவையல் அரைச்சு சாப்பிட்டு பாருங்க. வீட்ல அம்மி இருந்துச்சுன்னா அந்த அம்மில இந்த துவையல்ல அரைச்சு சாப்பிட்டீங்கன்னா அவ்வளவு ருசியா இருக்கும் இல்லாதவங்க மிக்ஸி ஜாரிலேயே அரைச்சுக்கோங்க. இந்த சூப்பரான எள்ளு துவையல் ரெசிபி குழந்தைகளுக்கு கண்டிப்பா கொடுக்கனும். முக்கியமா பெண் குழந்தைகளுக்கு கண்டிப்பா இந்த எள்ளு துவையல் ரெசிபியை அடிக்கடி செஞ்சு கொடுக்கணும்.
எள்ளு சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் இருக்கு ரத்த அழுத்தம் குறைவாகும் இதய நோய் சரியாகும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும் இந்த மாதிரி எள்ளு சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் நமக்கு கிடைக்கும். அதனால கண்டிப்பா இந்த எள்ளு துவையலை அடிக்கடி சாப்பிடுங்க. இந்த ரெசிபிக்கு வெள்ளை எள்ளும் பயன்படுத்தலாம். கருப்பு எள்ளும் பயன்படுத்தலாம். ரெண்டுமே டேஸ்ட் சூப்பரா இருக்கும்.இப்ப வாங்க இந்த சுவையான எள்ளு துவையல் ரெசிபி எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட கரூர் எள்ளு குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!
Ingredients
Method
ஒரு கடாயில் கருப்பு எள் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு நல்லெண்ணெய் சிறிதளவு சேர்த்து உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
புளி சேர்த்து வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்தால் சுவையான எள்ளு துவையல் தயார்.





