இந்த மழை காலத்துக்கு ஏதாவது காரசாரமா சாப்பிடணும்னு ஆசையா இருக்கும் அப்படி இருக்கும் போது நல்ல மிளகு தூக்கலா போட்டு ஒரு சூப்பரான பூண்டு குழம்பு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு இதமா இருக்கும். இந்த பூண்டு மிளகு குழம்பு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். சின்ன வெங்காயம் பூண்டு இதெல்லாம் நல்லா வதக்கி செய்றதால இதோட டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும். பூண்டு குழம்பு சாப்பிடுவதற்கு நிஜமாவே ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இது கூட அப்பளம் சேர்த்து சைடு டிஷ்ஷா சாப்பிடும்போது சொல்றதுக்கு வார்த்தையே இல்லை.
சொர்க்கமா இருக்கும். சுவையான இந்த பூண்டு குழம்புக்கு ரெண்டுத்தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம் ஒரு சிலர் சளி இருமல் காய்ச்சல் இருக்கும்போது ஹாஸ்பிடல் போக மாட்டாங்க அதுக்கு பதிலா வீட்ல இந்த மாதிரி மருந்து குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அவ்வளவு ருசியா இருக்கும் சளி இருமல் கூட சில பேருக்கு பறந்து போயிடும். இதுல மிளகு சீரகம் வறுத்து அரைச்சு சேர்க்கறதால இதோட டேஸ்ட் அவ்ளோ வாசனையா இருக்கும் ருசியாகவும் இருக்கும். நல்ல சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடுவதற்கு அவ்வளவு சூப்பரா இருக்கும்.
சூடான இட்லி தோசைக்கு கூட இந்த பூண்டு குழம்பு செம காம்பினேஷன். வீட்ல யாருக்காவது ரொம்ப உடம்பு முடியல தொண்டை வலி இருக்கு அப்படின்னா அவங்களுக்கு இந்த குழம்பு செஞ்சு கொடுங்க. கண்டிப்பா சாப்பிட்டுவிட்டு சுவையா இருக்குன்னு பாராட்டுவாங்க. இந்த மழைக்காலத்துக்கு ஒரு சூப்பரான மருந்து குழம்புனே சொல்லலாம். கடையில கிடைக்கிற மாதிரியான சுவைல வீட்லையே இந்த மாதிரி செய்ய முடியும்.
இதுக்கு தக்காளி கூட சேர்க்க தேவையில்லை. எதுவுமே அரைச்சு சேர்க்காமல் நல்லா கெட்டியா இந்த குழம்பு பார்க்கவே நாக்குல எச்சில் ஊறும். எத்தனை குழம்பு செஞ்சாலும் இந்த குழம்பு ரெண்டு நாள் வரைக்கும் கூட வச்சு சாப்பிடுவாங்க. இதுல நல்லெண்ணெய் வேற ஊத்தி செய்றதால ரெண்டு நாளைக்கு கெட்டுப்போகாமல் இருக்கும் சூடு பண்ணி சூடு பண்ணி சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான அருமையான பூண்டு மிளகு குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பூண்டு மிளகு குழம்பு | Garlic Pepper Curry Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 12 பல் பூண்டு
- 1 1/2 டேபிள் ஸ்பூன் மிளகு
- 2 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
- 1 டேபிள் ஸ்பூன் தனியா தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- புளி எலுமிச்சை அளவு
- 20 சின்ன வெங்காயம்
- 1/2 டீஸ்பூன் வெல்லம்
- உப்பு தேவையான அளவு
- நல்லெண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
- ஒரு கடாயில் 1 டீஸ்பூன் சீரகம், மிளகு சேர்த்து வறுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
- அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
- பிறகு பூண்டு சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகாய் தூள், தனியா தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பிறகு புளி கரைசல் சேர்த்து நன்றாக கலந்து அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறவும்.
- அனைத்தும் நன்றாக வெந்த பிறகு வெல்லம் சேர்த்து நல்லெண்ணெய் சேர்த்து கெட்டியானதும் இறக்கினால் சுவையான பூண்டு மிளகு குழம்பு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான பூண்டு வெங்காய குழம்பை ஒருவாட்டி இப்படி வச்சு பாருங்க! சுட சுட சாதத்திற்கு இதைவிட சூப்பர் குழம்பு வேறு எதுவுமே இருக்க முடியாது!