Advertisement
சட்னி

மதிய உணவுக்கு புளிச்ச கீரை துவையல் இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க அப்பறம் விடவே மாட்டீங்க!

Advertisement

கீரை வகைகளில் மிகவும் வித்தியாசமான கீரை புளிச்சக்கீரை. வாயில் வைத்தாலே அப்படி ஒரு புளிப்பு இதனிடத்தில் இருப்பது என்பது அதிசயம் தான். இயற்கை அன்னை கொடுத்த வரப்பிரசாதம் தான் இந்த புளிச்சக்கீரையும் ஒன்று. பாரம்பரிய முறையில் கிராமத்து வாடையில் புளிச்சக்கீரையை துவையல் ,இந்த முறையில் ஒரு முறை வைத்து பாருங்கள்! அதன் பிறகு இந்தக் கீரையை நீங்கள் அடிக்கடி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்!

இதை கோங்குரா துவையல் என்றும் சிலர் சொல்வார்கள். புளிச்சக்கீரையை பக்குவமாக துவையல் செய்துவிட்டால் போதும். சுடச்சுட சாதத்தில் இந்த துவையலை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அத்தனை அருமையாக இருக்கும். எவ்வளவு சாதம் உள்ளே இறங்குது அப்படின்னு தெரியவே தெரியாது. சரி சூப்பரான இந்த பாரம்பரிய ரெசிபியை பார்க்கலாம் வாங்க. புளிச்சக்கீரைத் துவையல் சமைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

Advertisement

புளிச்சக்கீரைத் துவையல் | Gongura Chutney Recipe In Tamil

Print Recipe
கீரை வகைகளில் மிகவும் வித்தியாசமான கீரை புளிச்சக்கீரை. வாயில் வைத்தாலே அப்படி ஒரு புளிப்பு இதனிடத்தில்இருப்பது என்பது அதிசயம் தான். இயற்கை அன்னை கொடுத்த வரப்பிரசாதம்தான் இந்த புளிச்சக்கீரையும்ஒன்று. பாரம்பரிய முறையில் கிராமத்து வாடையில் புளிச்சக்கீரையை துவையல் ,இந்த முறையில் ஒரு முறை வைத்து பாருங்கள்!அதன் பிறகு இந்தக் கீரையை நீங்கள் அடிக்கடி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்!.
Advertisement
இதை கோங்குரா துவையல் என்றும் சிலர் சொல்வார்கள். புளிச்சக்கீரையை பக்குவமாகதுவையல் செய்துவிட்டால் போதும். சுடச்சுட சாதத்தில் இந்த துவையலைபோட்டு பிசைந்து சாப்பிட்டால் அத்தனை அருமையாக இருக்கும்.
Course chutney, LUNCH, Side Dish
Cuisine andhra, tamilnadu
Keyword Gongura Chutney
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 108

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 2 கைப்பிடி புளிச்சக்கீரை
  • 1 மேசைக்கரண்டி தேங்காய் துருவல் (விரும்பினால் மட்டும்)
  • 2 பச்சைமிளகாய் காரத்திற்கேற்ப)
  • 1 வெங்காயம்
  • 2 சிகப்பு மிளகாய்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு
  • 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு

வறுத்து பொடிக்க:

  • 1 தேக்கரண்டி வெந்தயம்
  • 1 தேக்கரண்டி தனியா
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி வெள்ளை எள்

Instructions

  • கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து அலசி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சைமிளகாயை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  • பின்னர் அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையை போட்டு வதக்கவும். கடைசியில் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி எடுத்து விடவும். வாணலியில் வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்தவற்றை மிக்ஸில்யில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும், அதனுடன் வதக்கி வைத்துள்ள கீரை, பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து அரைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • அரைத்துவைத்திருக்கும் துவையலுடன் வதக்கியவற்றை போட்டு கலந்துக் கொள்ளவும். சுவையான கோங்குரா துவையல் ரெடி.

Nutrition

Serving: 500g | Calories: 108kcal | Carbohydrates: 10g | Protein: 4g | Fat: 1g | Saturated Fat: 0.5g | Potassium: 317mg | Sugar: 0.5g
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

6 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

17 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

23 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago