Advertisement
சட்னி

இட்லி, தோசைக்கு ஏற்ற கோங்குர சட்னி இப்படி செய்து பாருங்க!

Advertisement

வித்தியாசமா சுவைமிகுந்த இந்த சட்னி அரைச்சு பாருங்க. புளிச்ச கீரையை வைத்து சூப்பரான சட்னி எப்படி செய்வது என்று தான் இன்று நாம் பார்க்க போகிறோம். இதை கோங்குரா சட்னி என்றும் சிலர் சொல்வார்கள். இந்த புளிச்சக்கீரையை பக்குவமாக சட்னி செய்துவிட்டால் போதும். சுடச்சுட சாதத்தில்

இதையும் படியுங்கள் : கடலை பருப்பு சட்னி இனி இப்படி செய்து பாருங்க! மீண்டும் மீண்டும் வைக்க தோன்றும் சுவையில்!

Advertisement

இந்த துவையலை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அத்தனை அருமையாக இருக்கும். எவ்வளவு சாதம் உள்ளே இறங்குது அப்படின்னு தெரியவே தெரியாது. இதை இட்லி தோசை சப்பாத்தி என்று எல்லாவற்று தொட்டு கொள்ள சுவையாக இருக்கும் . சூப்பரான இந்த பாரம்பரிய ரெசிபியை பார்க்கலாம் வாங்க.

கோங்குர சட்னி | Gongura Chutney Recipe in Tamil

Print Recipe
வித்தியாசமா சுவைமிகுந்த இந்த சட்னி அரைச்சு பாருங்க. புளிச்ச கீரையை வைத்து சூப்பரான சட்னி எப்படி செய்வது என்று தான் இன்று நாம் பார்க்க போகிறோம். இதை கோங்குரா சட்னி என்றும் சிலர் சொல்வார்கள். இந்த புளிச்சக்கீரையை பக்குவமாக சட்னி செய்துவிட்டால் போதும். சுடச்சுட சாதத்தில் இந்த துவையலை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அத்தனை அருமையாக இருக்கும். எவ்வளவு சாதம் உள்ளே இறங்குது
Advertisement
அப்படின்னு தெரியவே தெரியாது. இதை இட்லி தோசை சப்பாத்தி என்று எல்லாவற்று தொட்டு கொள்ள சுவையாக இருக்கும் . சூப்பரான இந்த பாரம்பரிய ரெசிபியை பார்க்கலாம் வாங்க.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword chutney, சட்னி
Prep Time 5 minutes
Advertisement
Cook Time 10 minutes
Total Time 15 minutes
Servings 4 People
Calories 108

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1 கட்டு புளிச்ச கீரை
  • 2 Tsp தனியா
  • 16 வர மிளகாய்
  • 1 கைப்பிடி பூண்டு
  • புளி சிறு நெல்லிக்காய் அளவு
  • பெருங்காயம் சிறிது

தாளிக்க

  • 1 Tsp கடுகு
  • 1/2 Tsp துவரம் பருப்பு
  • 1/2 Tsp உளுந்தபருப்பு
  • 1 Tbsp எண்ணெய்

Instructions

  • முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு, பெருங்காயம், வரமிளகாய், தனியா இவற்றை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
  • பின்பு நாம் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை கடாயில் சேர்த்து நன்கு வதக்கி ஆற வைத்து கொள்ளவும். பின் மிக்ஸியில் சிறிதளவு புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்த அரைத்து எடுக்கவும்.
  • பின் கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து தாளித்து, பின் அதில் நசுக்கி பூண்டை சேர்த்து வதக்கவும்.
  • இந்தக் கலவையில் அரைத்த கோங்குராச் சட்னியைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும். ஆந்திரா கோங்குரா சட்னி தயார். இதை சாதத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

Nutrition

Serving: 600G | Calories: 108kcal | Carbohydrates: 10g | Protein: 4g | Fat: 1g | Saturated Fat: 0.5g | Potassium: 317mg | Sugar: 0.5g
Advertisement
Prem Kumar

Recent Posts

வாயில வச்ச உடனே கரைந்து போற ரொம்பவே ஆரோக்கியமான தேன் ஐஸ்கிரீம் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா…

25 நிமிடங்கள் ago

மதிய உணவுக்கு சுட சுட சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!

கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு .ஒவ்வொரு வகையும்…

2 மணி நேரங்கள் ago

பணம் கொட்ட வீட்டு வாசலில் அதிகாலை தூவ வேண்டியவை

இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய…

4 மணி நேரங்கள் ago

ஒரு சட்டி சோறும் காலியாகும் காரைக்குடி செட்டிநாடு சுரக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!

பொதுவாக நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகள், கிரேவிகள், மற்றும் பொரியல் என அனைத்தையும் மணமாகவும் ருசியாகவும் வைத்து சாப்பிட்டாலும். அதை…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 29 ஏப்ரல் 2024!

மேஷம் உங்களின் பணிவான நடத்தை இன்று பாராட்டப்படும். உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.…

7 மணி நேரங்கள் ago

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

17 மணி நேரங்கள் ago