- Advertisement -
இது போன்று இட்லி, தோசைக்கு வித்தியாசமாக கடலை பருப்பு சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். மீண்டும் மீண்டும் தோசை, இட்லி கேட்டு சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : கலக்கலான சுவையில் பாம்பே சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
- Advertisement -
இந்த சட்னி குறைந்த நேரத்திலும் சுலபமாகவும் செய்து விடலாம். இந்த சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
கடலை பருப்பு சட்னி | Kadalai Paruppu Chutney Recipe In Tamil
இது போன்று இட்லி, தோசைக்கு வித்தியாசமாக கடலை பருப்பு சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். மீண்டும் மீண்டும் தோசை, இட்லி கேட்டு சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ருசியாக இருக்கும். இந்த சட்னி குறைந்த நேரத்திலும் சுலபமாகவும் செய்து விடலாம். இந்த சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Yield: 4 people
Equipment
- 2 கடாய்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- எண்ணெய் சிறிதளவு
- கட்டி பெருங்காயம் சிறிய துண்டு
- 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
- 7 வர மிளகாய்
- 1 வெங்காயம் நறுக்கியது
- 2 பல் பூண்டு
- புளி சிறிதளவு
- உப்பு தேவைக்கேற்ப
- 2 தக்காளி நறுக்கியது
தாளிக்க:
- எண்ணெய் கொஞ்சம்
- 1 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- கருவேப்பிலை கொஞ்சம்
செய்முறை
செய்முறை:
- முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கட்டி பெருங்காயம் சேர்த்து பொரிந்ததும், கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுபட்டதும் அதனை ஒரு தட்டில் எடுத்து ஆறவிடவும்.
- பிறகு அதே கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பூண்டு, நறுக்கிய வெங்காயம், புளி சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும், தேவையான அளவு உப்பு, தக்காளி சேர்த்து வேகும் வரை வதக்கவும். அதனை இறக்கி ஆறவிடவும்.
- அடுத்து முதலில் வறுத்த கடலை பருப்பு, பெருங்காயம், மிக்சியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து அதனுடன் வதக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
- தாளிப்பதற்கு பேனில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் ஊற்றி கலந்து பரிமாறவும்.
- இப்பொழுது சுவையான கடலை பருப்பு சட்னி ரெடி.