Advertisement
அசைவம்

கோங்குரா முட்டை குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!

Advertisement

கோங்குரா முட்டை குழம்பு. கறி குழம்பு சுவையில் கோங்குரா முட்டை குழம்பு இப்படி செஞ்சு சாப்பிட்டுங்க!இந்த குழம்புக்கு அவ்வளவு ருசியா. ருசி மட்டும் இல்லைங்க. இது அவ்வளவு ஆரோக்கியத்தை தரக்கூடிய குழம்பும் கூட. முட்டை குழம்பு என்றாலே தேங்காய் அரைத்து ஊற்றி முட்டை சுவையுடன், காரமும் கலந்து தான் இருக்கும்.

இதையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ஏற்ற கோங்குர சட்னி இப்படி செய்து பாருங்க!

Advertisement

ஆனால் இந்த கோங்குரா முட்டை குழம்பு அப்படி இல்லை நல்ல காரசாரமாக சிறிது புளிப்பு சுவையுடன் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கோங்குரா முட்டை குழம்பு வைத்து சாப்பிட்டால் அசைவம் சாப்பிட்ட உணர்வு கிடைக்கும். வாங்க ஒரு காரசாரமான கோங்குரா முட்டை குழம்பு எப்படி வைப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கோங்குரா முட்டை குழம்பு | Gongura Egg Kulambu Recipe in Tamil

Print Recipe
கோங்குரா முட்டை குழம்பு. கறி குழம்பு சுவையில் கோங்குரா முட்டை குழம்பு இப்படி செஞ்சு சாப்பிட்டுங்க! இந்த குழம்புக்கு அவ்வளவு ருசியா. ருசி மட்டும் இல்லைங்க. இது அவ்வளவு ஆரோக்கியத்தை தரக்கூடிய குழம்பும் கூட. முட்டை குழம்பு என்றாலே தேங்காய் அரைத்து ஊற்றி முட்டை சுவையுடன், காரமும் கலந்து தான் இருக்கும். ஆனால் இந்த கோங்குரா முட்டை குழம்பு அப்படி இல்லை நல்ல காரசாரமாக சிறிது புளிப்பு சுவையுடன் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கோங்குரா முட்டை குழம்பு வைத்து சாப்பிட்டால் அசைவம் சாப்பிட்ட உணர்வு கிடைக்கும்.
Advertisement
வாங்க ஒரு காரசாரமான கோங்குரா முட்டை குழம்பு எப்படி வைப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Egg, முட்டை
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 156

Equipment

  • 1 மிக்ஸி ஜார்
  • 1 வாணலி

Ingredients

  • 1 கோங்குரா/புளிச்சக்கீரை கட்டு
  • 3 tsp எண்ணெய்
  • 3 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • கருவேப்பிலை தேவையான அளவு
  • 1/4 tsp மஞ்சள் தூள்
  • 1/2 tsp இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 கப் தண்ணீர்
  • 1/4 tsp மல்லித்தூள்
  • 1/4 tsp சீரக பொடி
  • 1/2 tsp மிளகாய்த்தூள்
  • 1/2 tsp கரம் மசாலா
  • 4 முட்டை வேகவைத்தது

Instructions

  • முதலில் புளிச்சக்கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், புளிச்சக்கீரை, பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, கீரை நன்கு வேகும் வரை வேக வைக்கவும்.
  • பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
  • பின்பு அத்துடன் கறிவேப்பிலை, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் அரைத்து வைத்துள்ள கீரையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதோடு மல்லித் தூள் மற்றும் சீரகப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும்.
  • பிறகு அதில் சிறிது மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இறுதியில் அதில் வேக வைத்துள்ள 2 முட்டையை இரண்டாக வெட்டியோ அல்லது அப்படியே சேர்த்து பிரட்டி, 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் கோங்குரா முட்டை குழம்பு ரெடி!!

Nutrition

Serving: 600g | Calories: 156kcal | Carbohydrates: 2.7g | Protein: 7.1g | Fiber: 13g
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 05 மே 2024!

மேஷம் இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய…

2 மணி நேரங்கள் ago

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

11 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

12 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

14 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

19 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

19 மணி நேரங்கள் ago