Advertisement
ஸ்வீட்ஸ்

தித்திக்கும் சுவையில் கோதுமை அப்பம் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி சுவை!!

Advertisement

நமது பாரம்பரிய உணவு முறைகளில் அன்றிலிருந்து இன்று வரை உள்ள ஒரு இனிப்பு பொருள் என்றால் அது இந்த பனியாரம் தான். நமது முன்னோர்கள் பண்டிகை நாட்களில் கூட இனிப்புக்காக இது போன்ற பனியாரங்களை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு அந்தப் பண்டிகையை கொண்டாடுவார்கள். ஆனால் தற்போதைய நாட்களில் இந்த பனியாரம் செய்வது நாளடைவில் குறைந்து கொண்டு வருகிறது இதன் சுவையும் அட்டகாசமான முறையில் இருக்கும்.

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் தேங்காய் பால் பனியாரம் செய்வது எப்படி ?

Advertisement

இது போன்று நீங்கள் செய்தால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு ரெசிபியாக இருக்கும். இது குழந்தைகளுக்கு கண்டிப்பான முறையில் பிடிக்கும் ஆகையால் நீங்கள் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இதை குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். அதனால் இன்று இந்த கோதுமை இனிப்பு பனியாரம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கோதுமை இனிப்பு பனியாரம் | Kothumai Inipu Paniyaram Recipe in Tamil

Print Recipe
நமது முன்னோர்கள் பண்டிகை நாட்களில் கூட இனிப்புக்காக இது போன்ற பனியாரங்களை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு அந்தப் பண்டிகையை கொண்டாடுவார்கள். ஆனால் தற்போதைய நாட்களில் இந்த பனியாரம் செய்வது நாளடைவில் குறைந்து கொண்டு வருகிறது இதன் சுவையும் அட்டகாசமான முறையில் இருக்கும். இது போன்று நீங்கள் செய்தால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு ரெசிபியாக இருக்கும்.
Course sweets
Cuisine Indian, TAMIL
Keyword paniyaram, பனியாரம்
Prep Time 20 minutes
Cook Time 30 minutes
Total Time 50 minutes
Servings 5 People
Calories 110

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 100 கிராம் வெல்லம்
  • ½ கப் தண்ணீர் பாகு செய்வதற்கு
  • 2 வாழைப்பழம்
  • 1 கப் கோதுமை
  • ¼ கப் அரிசி மாவு
  • ¼ tbsp ஏலக்காய் தூள்
  • 1 சிட்டிகை உப்பு
  • ¼ tbsp பேக்கிங் சோடா
  • தண்ணீர் தேவையான அளவு மாவு கரைக்க

Instructions

  • முதலில் கோதுமை இனிப்பு பனியாரம் செய்வதற்கு வெல்லப்பாகு தயார் செய்ய ஒரு டீ பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 100 கிராம் துருவிய வெல்லத்தை சேர்த்து அதனுடன் அரைக்கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • பின் வெல்லம் நன்கு உருகி பாகுவாக வந்தவுடன் வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து வடிகட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு இரண்டு வாழைப்பழங்களை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
    Advertisement
  • பின் அரைத்துக் கொண்ட வாழைப்பழத்தை ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் ஒரு கப் கோதுமை மாவு, கால் கப் அரிசி மாவு, கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் தயார் செய்த வெல்ல பாகுவை சேர்த்து நன்கு பிசைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது சிறிதாக சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். பின்பு தயார் செய்த பனியார மாவை ஒரு 30 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்து கொள்ளுங்கள்.
  • பின் 30 நிமிடம் ஊற வைத்த பின் கால் டீஸ்பூன் அளவு பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் பின்பு கடாயை அடைப்பில் வைத்து பனியாரம் மூழ்கும் அளவிற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தீயை மிதமாக வைக்கவும்.
  • பின்பு ஒரு கரண்டி மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றி அது போல் இன்னும் நான்கு கரண்டி மாவை ஊற்றி கொள்ளுங்கள் பின் பனியாரம் நன்றாக இருந்து பொரிந்து வந்தவுடன் எடுத்து விடுங்கள். இப்படியாக மீதம் இருக்கும் மாவை ஊற்றி பனியாரம் தயார் செய்து கொள்ளவும். அவ்வளவு தான் கோதுமை இனிப்பு பணியாரம் இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 50கிராம் | Calories: 110kcal | Carbohydrates: 45g | Protein: 18g | Fat: 3.2g | Saturated Fat: 1.4g | Cholesterol: 20.4mg | Sodium: 16mg | Potassium: 87mg | Sugar: 19.76g
Advertisement
Prem Kumar

Recent Posts

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

2 மணி நேரங்கள் ago

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…

3 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…

4 மணி நேரங்கள் ago

இட்லி ,தோசை சாதம்,சப்பாத்திக்கு அருமையான பாலக் கீரை தால் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்…

5 மணி நேரங்கள் ago

வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்

கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…

9 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் சூப்பரான மலபார் முட்டை பிரியாணி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக முட்டை பிரியாணி என்றால் சொல்லவா…

10 மணி நேரங்கள் ago