Home சைவம் கிரீன் பொட்டேட்டோ ஃப்ரை இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க ரச சாதத்துடன்...

கிரீன் பொட்டேட்டோ ஃப்ரை இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க ரச சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்!!

பொதுவா உருளைக்கிழங்கு பிரை அப்படின்னா சின்ன குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். ஆனா நம்ம வீட்ல எப்பவுமே ஒரே மாதிரியான உருளைக்கிழங்கு ப்ரை தான் செய்வோம். அது மாதிரி உருளைக்கிழங்கு ப்ரை செஞ்சு அதை சைடிஷா வெச்சுட்டா போதும் என்ன சாப்பாடு வெச்சாலும் அது காலியாகிடும். லெமன் சாதம், புளி சாதம் தக்காளி சாதம் ரசம் சாதம் சாம்பார் சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பர் காம்பினேஷன் அப்படின்னா அது உருளைக்கிழங்கு ப்ரை தான். ஆனா எப்பவுமே உருளைக்கிழங்கு ஃப்ரை ஒரே மாதிரியா செய்யாம ஒரு தடவை இந்த மாதிரி கிரீன் பொட்டேட்டோ பிரை மாதிரி செஞ்சு பாருங்க.

-விளம்பரம்-

இந்த கிரீன் பொடேடோ ஃப்ரை சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இதுல நம்ம மொறுமொறுப்புக்காக பொட்டுக்கடலை மாவு சேர்க்க போறோம். இதுல நம்ம இருக்க போற கொத்தமல்லி இலைகள் நம்ம உடம்புல இருக்கக்கூடிய ரத்தத்தை சுத்தம் செய்யும். கொத்தமல்லிய நம்ம ஏதாவது ஒரு சாப்பாட்டுல போட்டோம் அப்படின்னா கண்டிப்பா அத சாப்பிடாம ஒதுக்கி வச்சுடுவாங்க. அதனால இனிமேல் அந்த மாதிரி செய்யாம கொத்தமல்லியை நல்லா அரைச்சு அது கூட சீரகம் பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து நல்லா காரசாரமா மொறு மொறுன்னு இந்த மாதிரி ஒரு தடவை பொட்டேட்டோ ஃப்ரை செஞ்சு பாருங்க.

கண்டிப்பா வீட்ல இருக்கக்கூடிய எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. கண்டிப்பா உங்கள பாராட்டுவாங்க. இத சைடு டிஷ் க்கு மட்டும் இல்லாம ஈவினிங் டைம்ல டீ காபி கூட ஸ்னாக்ஸ் மாதிரியும் சாப்பிடலாம். இந்த பொட்டேட்டோ பிரை செய்யும் போது எண்ணெய் ரொம்ப ரொம்ப சூடா இருக்கணும். சூடு ரொம்ப கம்மியா இருந்துச்சுன்னா மசாலா பிரிஞ்சு நல்லாவே இருக்காது. அதனால நல்லா சூடான எண்ணெயில இதை போட்டு பொரிச்சு எடுக்கும் போது கண்டிப்பா உங்களுக்கு மசாலா ஒட்டி ஒரு சூப்பரான கிரீன் பொட்டேட்டோ பிரை கிடைக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கிரீன் பொட்டேட்டோ ஃப்ரை எப்படி சிம்பிளா சட்டுன்னு செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

கிரீன் பொட்டேட்டோ ஃப்ரை | Green Potato Fry Recipe In Tamil

பொதுவா உருளைக்கிழங்கு பிரை அப்படின்னா சின்ன குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். ஆனா நம்ம வீட்ல எப்பவுமே ஒரே மாதிரியான உருளைக்கிழங்கு ப்ரை தான் செய்வோம். அது மாதிரி உருளைக்கிழங்கு ப்ரை செஞ்சு அதை சைடிஷா வெச்சுட்டா போதும் என்ன சாப்பாடு வெச்சாலும் அது காலியாகிடும். லெமன் சாதம், புளி சாதம் தக்காளி சாதம் ரசம் சாதம் சாம்பார் சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பர் காம்பினேஷன் அப்படின்னா அது உருளைக்கிழங்கு ப்ரை தான். ஆனா எப்பவுமே உருளைக்கிழங்கு ஃப்ரை ஒரே மாதிரியா செய்யாம ஒரு தடவை இந்த மாதிரி கிரீன் பொட்டேட்டோ பிரை மாதிரி செஞ்சு பாருங்க. இந்த கிரீன் பொடேடோ ஃப்ரை சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஒரு தடவை பொட்டேட்டோ ஃப்ரை செஞ்சு பாருங்க. கண்டிப்பா வீட்ல இருக்கக்கூடிய எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Green Potato Fry
Yield: 4 People
Calories: 164kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 2 உருளைக்கிழங்கு
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் உருளைக்கிழங்கை கழுவி சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலைகள் பச்சை மிளகாய் சீரகம், உப்பு, மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்த அரைத்து எடுக்கவும்.
  • அரைத்த விழுதை உருளைக்கிழங்குடன் சேர்த்து அதனுடன் பொட்டுக்கடலை மாவு சேர்த்து கலந்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான கிரீன் பொட்டேட்டோ பிரை தயார்.

Nutrition

Serving: 350g | Calories: 164kcal | Carbohydrates: 2.6g | Protein: 13g | Fat: 3.7g | Sodium: 64mg | Potassium: 110mg | Fiber: 6.3g | Vitamin A: 79IU | Vitamin C: 126mg | Calcium: 15mg | Iron: 9mg

இதனையும் படியுங்கள் : உருளைகிழங்கு மிளகு வறுவல்