புராட்டாசி ஸ்பெஷல் கோவா கிரேவி இப்படி மிஸ் பண்ணமா வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

கோவா சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த காய். கோவா பயன்படுத்தி பலவிதமான உணவுகளை செய்யலாம். தமிழ்நாட்டை விட கோவக்காய் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகவும் பிரபலமான,  கோவா வைத்து பொரியல், வறுவல்,  துவட்டல், கொழுந்து, கோவா சாதம் போன்ற பல விதமான உணவு வகைகளை செய்யலாம்.

-விளம்பரம்-

 கோவா தினமும் நம் உணவில் சேர்த்து வந்தால் உடலில் இருக்கும் பல பிரச்சனைகள் நீங்கும். அந்த அளவிற்கு மருத்துவ குணம் மிக்கது கோவா. எனவே இக்கோவாவை வைத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் கிரேவி எப்படி செய்வது..? என்பதை இப்பதிவில் பார்க்கலாம். நாம் என்ன தான் பொரியல் கூட்டு என்று சாப்பிட்டாலும் கிரேவியின் சுவையை மிஞ்ச முடியாது.

- Advertisement -

பலபேர் கூட்டு பொரியலை விட கிரேவியை தான் விரும்பி சாப்பிடுவார்கள். அதேபோல் அனைவரும்  கோவா கிரேவியை விரும்பி சாப்பிடுவார்கள். கோவா கிரேவி தோசை, சப்பாத்தி , சுடு சாதம் போன்றவற்றிக்கு அட்டகாசமான சுவையை தரும். மதிய உணவுடன் சாப்பிடுவதற்கும் பிரமாதமாக இருக்கும். எலுமிச்சை சாதம்,  தக்காளி  சாதம்,  தயிர் சாதம்,  தேங்காய் சாதம்  ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.

Print
No ratings yet

கோவா கிரேவி | Guava Gravy Recipe In Tamil

 கோவா தினமும் நம் உணவில் சேர்த்து வந்தால் உடலில் இருக்கும் பல பிரச்சனைகள் நீங்கும்.அந்த அளவிற்கு மருத்துவ குணம் மிக்கது கோவா. எனவே இக்கோவாவை வைத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் கிரேவி எப்படி செய்வது..? என்பதை இப்பதிவில் பார்க்கலாம். நாம் என்ன தான் பொரியல் கூட்டு என்று சாப்பிட்டாலும் கிரேவியின் சுவையை மிஞ்ச முடியாது. மதிய உணவுடன் சாப்பிடுவதற்கும் பிரமாதமாக இருக்கும். எலுமிச்சை சாதம்,  தக்காளி  சாதம்,  தயிர்சாதம்,  தேங்காய்சாதம்  ஆகியவற்றுடன்சுவையாக இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Gravy
Cuisine: tamil nadu
Keyword: Guava Gravy
Yield: 4
Calories: 422kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கொய்யாக்காய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 ஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1 ஸ்பூன் கொத்தமல்லி தூள்
  • 1 ஸ்பூன் கரம் மசாலா
  • கொத்தமல்லி தழை

அரைக்க

  • 1 ஸ்பூன் கசகசா
  • 1/2 மூடி தேங்காய்
  • 2 பச்சை மிளகாய்

செய்முறை

  • முதலில் கொய்யாவை கழுவி தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், வெங்காயம், தக்காளி, கொய்யா, ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • இவை நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
     
  • தேங்காய்,பச்சை மிளகாய், கசகசா, மூன்றையும் ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் அரைத்ததை எடுத்து கொதிக்கும் குழம்பில் ஊற்றி பிறகு மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
     
  • அவ்வளவுதான் சுவையான கோவா கிரேவி தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 422kcal | Protein: 8.1g | Fat: 4.5g | Fiber: 8.5g | Calcium: 90mg