- Advertisement -
காலை உணவாக பெருபாலும் அனைவரும் விரும்புவது இட்லி தான். இந்த இட்லிக்கு சட்டினி, சாம்பார், இட்லி பொடி என எதை வேண்டுமானாலும் தொட்டு சாப்பிடலாம்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான கருவேப்பிலை இட்லி பொடி செய்வது எப்படி ?
- Advertisement -
நாம் இந்த பதிவில் ஒரு சுவையான இட்லி பொடியை எப்படி சுலபமாக செய்வது என பார்ப்போம்.ஒரு முறை இதை செய்து பார்த்தால் அடிக்கடி கண்டிப்பாக செய்வீர்கள்.
இட்லி பொடி | Idly Podi Recipe in Tamil
காலை உணவாக பெருபாலும் அனைவரும் விரும்புவது இட்லி தான். இந்த இட்லிக்கு சட்டினி, சாம்பார், இட்லி பொடி என எதை வேண்டுமானாலும் தொட்டு சாப்பிடலாம். நாம் இந்த பதிவில் ஒரு சுவையான இட்லி பொடியை எப்படி சுலபமாக செய்வது என பார்ப்போம்.ஒரு முறை இதை செய்து பார்த்தால் அடிக்கடி கண்டிப்பாக செய்வீர்கள்.
Yield: 5 People
Calories: 34kcal
Equipment
- 1 வானொலி
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கப் உளுந்தம் பருப்பு
- 1 கப் கடலை பருப்பு
- 7 வர மிளகாய்
- 7 பூண்டு
- 1 tsp சீரகம்
- 1 tsp மிளகு
- 1/2 tsp கல் உப்பு
- 1/2 tsp பெருங்காயம்
- 1 tsp மிளகாய்த்தூள்
செய்முறை
- முதலில் உளுந்தம் பருப்பு கடலை பருப்பு இரண்டையும் சேர்த்து அடுப்பில் வாணலியை வைத்து இரண்டு நிமிடம் வறுக்கவும். அதோடு வர மிளகாய், பூண்டு சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் வறுக்கவும்.
- ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு சேர்த்து நன்கு மொரு மொரு என வறுத்து எடுக்கவும். அதன் நிறமும் மாறி, மனமும் கம கம என வரும்.
- வறுத்து எடுத்ததை மிக்சி ஜாரில் சேர்த்து கல் உப்பு, பெருங்காயம், மிளகாய்த்தூள் சேர்த்து கொற கொறப்பாக அரைத்து எடுக்கவும். சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
- இட்லி மற்றும் தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இட்லி தோசை மீது உருக்கிய நெய்யை விட்டு அதன் மேல் இந்த சுவையான இட்லி பொடியை தூவி சாப்பிட்டு பாருங்கள். கடைகளில் விற்கப்படும் இட்லி பொடியை மறந்திடுவீங்க நண்பர்களே.
செய்முறை குறிப்புகள்
Nutrition
Serving: 500g | Calories: 34kcal | Carbohydrates: 25g | Protein: 6g | Fat: 3g
Vanali Or vsnoli (radio)