கோவக்காய் அப்படின்னாலே எல்லாருக்கும் இப்ப ரொம்பவே பரிச்சயமான ஒரு காயாக ஆயிடுச்சு. முன்னாடி இது விளையாடறதுக்கு மட்டும் பயன்படுத்தற காய் அப்படின்னு நினைச்சிட்டு இருந்தோம். ஆனா இப்போ அந்த காய்கள் நல்ல மருந்து பொருளாகவும் உணவுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதனுடைய இலைகளும் , கோவை பழங்களுமே வந்து மருத்துவ குணம் நிறைந்ததாக இருக்கு. அப்படி அந்த கோவக்காய் நம்ம எப்ப வாங்கினாலும் அதுல வறுவலும், பொரியலும் தான் பண்ணி இருப்போம்.
ஆனால் இந்த கோவக்காய் வச்சு கூட்டு பண்ணி சாப்பிட்டு இருக்கீங்களா? அது இன்னுமே ரொம்ப சுவையா இருக்கும். இந்த கோவக்காய் கூட்டு எப்படி செய்யறது தெரிஞ்சுக்க இருக்கும் இந்த பதிவில். கோவக்காயில் சிலர் வற்றல் கூட போடுவாங்க. இந்த கோவக்காய் வற்றல் ரொம்பவே சுவையா இருக்கும். கோவக்காய் விருப்பமில்லாதவர்களுக்கு கூட இந்த கோவக்காயில நம்ம கூட்டு வச்சி கொடுக்கும் போது ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த கோவக்காய் உடலில் நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்குது. முக்கியமா சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த கோவக்காய் நல்ல பலன்களை கொடுக்கிறது குளுக்கோஸை அளவை சமமாக வைப்பதில். ஆகையால் முடிந்த அளவுக்கு எல்லாருமே வாரத்துக்கு ஒரு தடவையாவது இந்த கோவக்காயை உணவில் சேர்த்துக்கோங்க. சரி வாங்க இந்த ருசியான கோவக்காய் கூட்டு எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.
கோவைக்காய் கூட்டு | Ivy Gourd Kootu Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ கோவைக்காய்
- 1/4 கப் பாசிப்பருப்பு
- 2 பச்சைமிளகாய்
- 1 தக்காளி
- 1/2 ஸ்பூன் பெருங்காயம்
- 1 வெங்காயம்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 2 காய்ந்த மிளகாய்
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1/2 கப் தேங்காய் துருவல்
- 2 பல் பூண்டு
- 1 கப் மோர்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் கோவை காய்களை சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கி மோரில் ஊற வைக்க வேண்டும்.
- பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் கழுவி வைத்துள்ள பாசிப்பருப்பு, தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து சிறிதளவு உப்பு, பெருங்காயம் சேர்த்து வேக வைக்கவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளவும்.
- பிறகு அதில் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்பு கறிவேப்பிலை , பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்த நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின் கூட்டிற்கு தேவையான அளவு நீர் சேர்த்துக் கொள்ளவும்.
- இப்போது மோரில் ஊற வைத்துள்ள கோவைகாய்களை எடுத்து சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு வேக வைக்கவும். கோவக்காய் வெந்த பிறகு அதில் வேக வைத்து எடுத்துள்ள பாசிப்பருப்பை நன்றாக மசித்து விட்டு கொதித்துக் கொண்டிருக்கும் கோவைக்காயில் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவலை சேர்த்து அதில் பச்சைமிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- கொதித்துக் கொண்டிருக்கும் கோவைக்காய் கூட்டில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கலந்து விடவும். தேங்காய் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு இறக்கி சாதத்தோடு பரிமாறினால் சுவையான கோவைக்காய் கூட்டு தயார்.