- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
கோவக்காய் இது ஊர்களில் ரொம்ப எளிதாகதாக கிடைக்கக்கூடிய ஒரு வகையான கொடிக்காய். இந்த காய் இப்போது நகர்ப்புறங்களில் அதிகமாகவே காய்கறி கடைகளில் கிடைக்குது. முதல் முறையாக இந்த கோவக்காயை காய்கறி கடைகளை பார்த்த உடனே கோவக்காய் வச்சு என்ன பண்ணுவாங்க அப்படின்னு யோசிக்கும்போது கோவக்காய் சாப்பிடுவாங்க அப்படின்னு தெரிஞ்சுக்கிட்டோம்.
எங்கள் ஊர்ல என்ன பண்ணுவோம்னா கோவைப்பழம் சாப்பிடுவோம் ஆனா கோவக்காய் சாப்பிட்டது கிடையாது. ஆனால் அந்த கோவை கொடியில உள்ள எல்லா பாட்டுமே ரொம்ப ரொம்ப மருத்துவ குணம் வாய்ந்தது அப்படின்னு சொல்லுவாங்க. அந்த கோவை இலையை தண்ணி சாறு மாதிரி வச்சு சாப்பிடும்போது நமக்கு வாயில் இருக்கிற புண்ணு வயித்துல புண்கள் எல்லாம் இருந்துச்சுன்னா அது எல்லாமே வந்து சரியா போயிடும் அப்படின்னு சொல்லுவாங்க. கோவக்காய் முதல் முதல்ல கடைகளில் பார்க்கும்போது சரி இதை வாங்கி என்ன சமைக்கலாம் அப்படின்னு பார்த்தேன்.
அது சாம்பார்ல போட்டு இருப்பாங்க பொரியல் பண்ணி சாப்பிட்டிருக்காங்க இதெல்லாம் பார்த்திருக்கோம்.இப்ப நாம என்ன பண்ண போறோம் அப்படின்னா அந்த கோவக்காயில் வறுவல் எப்படி பண்றது அப்படின்னு பார்க்க இருக்கிறோம். கோவக்காய் அல்சருக்கு ரொம்ப ரொம்ப நல்ல மருந்தா இருக்கு . இந்த கோவக்காயில் இருக்கிற சத்துக்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துறதுக்கும் உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதற்கும் இந்த கோவக்காய் பயன்படுது. அது மட்டும் இல்லாமல் கல்லீரல்ல இருக்கிற நச்சுத்தன்மையை வெளியேற்றக்கூடிய ஒரு பொருளாவும் இந்த கோவக்காய் பயன்படுகிறது. சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டது கோவக்காய். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதால் கோவக்காய் அதிகமாகவே உணவில் எடுத்துக் கொள்ளலாம். தினமும் சிறிதளவு கோவக்காய் எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மையை தருகிறது . கோவைக்காய் சாப்பிடும் பொழுது உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் மலச்சிக்கல் போன்றவை குணமாகிறது. இப்போது கோவக்காய் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Ingredients
Method
முதலில் அடுப்பில் வானெலியை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றாமல் வெறும் வானெலியில் கடலை பருப்பை வறுக்கவும்.
வறுத்த கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், சீரகம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் மிக்சியில் பொடியாக்கவும்.
பிறகு வானெலியை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , கறிவேப்பிலை சேர்த்துதாளிக்கவும்.
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, சேர்த்து நன்றாக வதக்கவும்.பின் கோவக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.பின் சாம்பார் தூள் சேர்த்து எண்ணெயில் பிரட்டி, உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு மூடி வேக விடவும்.
கோவக்காய் வெந்து நீர் இல்லாமல் வரும்போது அரைத்து வைத்துள்ள தேங்காய் பொடியை தூவி கலந்து நன்றாக கிளறி விடவும்.
கோவக்காய் நன்றாக தேங்காயுடன் கலந்த பின் வேறு தட்டிற்கு மாற்றி பரிமாறினால் சூடான சுவையான கோவக்காய் வறுவல் தயார்.சாம்பார், ரசம், தயிர் சாதத்துக்கு நல்ல காம்பினேஷனாக இருக்கும்.






