- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
மட்டன் கோலா உருண்டை, சிக்கன் கோலா உருண்டை, மட்டன் கட்லெட், சிக்கன் கட்லட் எல்லாத்தையும் நான் வெஜ்ல செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் பலாக்கொட்டை வச்சு இந்த ஒரு அருமையான கோலா உருண்டையை ட்ரை பண்ணி பாருங்க. சாப்பிட்டு இது மட்டன் கோலா உருண்டையா அப்படின்னு கேட்பாங்க அந்த அளவுக்கு இந்த கோலா உருண்டையோட டேஸ்ட் அப்படியே நான் வெஜ் கோலா உருண்டை மாதிரியே இருக்கும். இந்த கோலா உருண்டை நம்ம ஸ்நாக்ஸ்க்கு சாப்பிடலாம் அது மட்டும் இல்லாம ஒரு நான்வெஜ் விருந்து வைக்கும்போது இந்த பலாக்கொட்டையில் செஞ்ச கோலா உருண்டையை நான் வெஜ் அப்படின்னு சொல்லி நம்ம வைக்கலாம் யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
அந்த அளவுக்கு சூப்பர் டேஸ்டா நான் வெஜ் மாதிரியே இருக்கும். பலாக்கொட்டை நிறைய இருக்கு அத வச்சு என்ன செய்றது அப்படின்னு யோசிச்சீங்கன்னா இனிமேல் இதை செஞ்சு அசத்துங்க. சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க வெளியில நல்லா கிரிஸ்பியா உள்ள சாப்டா சாப்பிடுவதற்கு அவ்வளவு ஒரு டேஸ்டா இருக்கும். இப்ப வாங்க இந்த டிஃபரண்டான பலாக்கொட்டை கோலா உருண்டையை எப்படி சீக்கிரத்துல செய்வதென்று பார்க்கலாம்.
Ingredients
Method
பலாக்கொட்டையை குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து ஏழு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை, சோம்பு, சீரகம், மிளகு போட்டு லேசாக வைக்கவும்.
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்த்து கிளறிய பிறகு பலாக்கொட்டையை சேர்த்து மல்லி தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
அனைத்தையும் எண்ணையிலேயே ஐந்து நிமிடம் வதக்கிய பிறகு ஆற வைத்து மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அதனுடன் பொட்டுக்கடலை மாவு சேர்த்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பலாக்கொட்டை கோலா உருண்டை தயார்.






