Advertisement
Uncategorized

மணமணக்கும் ஜெய்ப்பூர் சிக்கன் கிரேவி செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் சிக்கனை வைத்து ஒரு அற்புதமான ரெசிபி தான் செய்து பார்க்க போகிறோம். ஆம், இன்று வீடே மணமணக்கும் வகையில் ஜெய்ப்பூர் ஜில்லா சிக்கன் ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் சிக்கன் வாங்கி ஒரே மாதிரியான குழம்பு, கிரேவி, வறுவல் என செய்வதற்கு பதில் அவ்வப்பொழுது இது போன்று மாறுதலாக சிக்கன் ரெசிபிகளையும் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட பரிமாறினால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள் : காரசாரமான கீரின் சில்லி சிக்கன் செய்வது எப்படி ?

Advertisement

அவர்களுக்கும் இந்த ஜெய்ப்பூர் ஜில்லா சிக்கன் ரெசிபி மிகவும் பிடித்து போய்விடும். அடுத்த முறை உங்களையும் இது போல் செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள் அந்த அளவிற்கு ஒரு அட்டகாசமான சுவையில் இந்த சிக்கன் ரெசிபி இருக்கும். அதனால் இன்று இந்த ஜெய்ப்பூர் ஜில்லா சிக்கன் ரெசிபி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

ஜெய்பூர் ஜில்லா சிக்கன் ரெசிபி | Jaipur Jilla Chicken Recipe in Tamil

Print Recipe
நீங்கள் எப்பொழுதும் போல் சிக்கன் வாங்கி ஒரே மாதிரியான குழம்பு, கிரேவி, வறுவல் என செய்வதற்கு பதில் அவ்வப்பொழுது இது போன்று மாறுதலாக சிக்கன் ரெசிபிகளையும் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட பரிமாறினால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கும் இந்த ஜெய்ப்பூர் ஜில்லா சிக்கன் ரெசிபி மிகவும் பிடித்து போய்விடும். அடுத்த முறை உங்களையும் இது போல் செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள் அந்த அளவிற்கு ஒரு அட்டகாசமான சுவையில் இந்த சிக்கன் ரெசிபி இருக்கும்.
Course LUNCH
Cuisine Indian, jaipur
Keyword Chicken, சிக்கன்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 738

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Ingredients

சிக்கனை மசாலாவில் ஊற வைக்க

  • ½ KG சிக்கன்
  • 1 tsp மிளகாய் பொடி
  • ½ tsp மிளகு பொடி
  • ½ tsp சீரக பொடி
  • ½ tsp உப்பு
  • 1 tbsp தயிர்
  • ½ பழம் எலுமிச்சை சாறு

மசாலா அரைக்க

  • 1 tbsp மல்லி
  • ½ tsp மிளகு
  • ½ tsp சீரகம்
  • 3 பச்சை மிளகாய்
  • கொத்தமல்லி சிறிது
  • 1 tbsp தயிர்

சிக்கன் கிரேவி

  • 3 tbsp எண்ணெய்
  • 2 பட்டை
  • 3 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • கடல் பாசி சிறிது
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 2 பச்சை மிளகாய்
  • 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • அரைத்த மசாலா
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 tsp மிளகாய் தூள்
  • பொரித்த சிக்கன்
  • தண்ணீர் சிறிது
  • ½ tsp  கரம் மசாலா
  • கஸ்தூரி மேத்தி சிறிது

Instructions

  • முதலில் நாம் சுத்தப்படுத்தி வைத்துக் கொண்ட சிக்கனை ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் மிளகாய் பொடி, மிளகுப் பொடி, சீரகப்பொடி, உப்பு, தயிர் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின் மசாலா அரைக்க ஒரு மிக்ஸி ஜாரில் மல்லி, மிளகு, சீரகம், பச்சை
    Advertisement
    மிளகாய், கொத்தமல்லி, தயிர் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தீயை விதமாக எரிய விட்டு.
  • பின் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு மணி நேரம் ஊற வைத்த சிக்கனை சேர்த்து, நிறம் மாறும் வரை பொரித்து பின் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கடல் பாசி, பிரியாணி இலை போன்ற பொருட்களை சேர்த்து ஐந்து வினாடி கிளறிவிட்டு.
  • பின் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும். பின் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாடை போகி வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன்.
  • நாம் அரைத்த மசாலாவை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் போன்ற பொருட்களை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பின் மசாலா பொருட்கள் நன்கு வதங்கியவுடன்.
  • இதனுடன் நாம் பொரித்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து ஒரு பத்து நிமிடம் வதக்கி கொள்ளுங்கள். பின் கடைசியாக இனுடன் கரம் மசாலா மற்றும் சிறிதளவு கஸ்தூரி மேத்தி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி விட்டு இறக்கி கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான ஜெய்ப்பூர் ஜில்லா சிக்கன் இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 750gram | Calories: 738kcal | Carbohydrates: 4g | Protein: 37g | Fat: 5g | Saturated Fat: 3g | Cholesterol: 18mg | Sodium: 32mg | Potassium: 1392mg | Fiber: 6g | Sugar: 2g
Advertisement
Prem Kumar

Recent Posts

எல்லா வெரைட்டி சாதத்துக்கும் சாப்பிடுற மாதிரி ஒரு சூப்பரான முட்டை தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

வீட்ல நான்வெஜ் எடுக்க முடியல அப்படின்னா நம்ம எல்லோருக்கும் மைண்டுக்கு வருவது முட்டை தான். முட்டையை வைத்து குழம்பு முட்டை…

2 நிமிடங்கள் ago

வீட்டில் மகிழ்ச்சி பொங்க செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள் இதோ!

ஜோதிட ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் நம்மை சுற்றிலும் நம்பிக்கை சுற்றிலும் நமக்குள் இருக்கும் எதிர்மறையா ஆற்றல்களையும் எண்ணங்களையும் விரட்டுவதற்கு நிறைய…

60 நிமிடங்கள் ago

இட்லி, தோசைக்கு ஏற்ற நெல்லை ஸ்பெஷல் கார சட்னி இப்படி ஓரு தரம் செய்து பாருங்க!

எப்பொழுதும் இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி, போன்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? உங்களுக்கு காரசாரமாக சாப்பிடனுனு…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 01 மே 2024!

மேஷம் நண்பர்கள் ஆதரவு அளித்து உங்களை மகிழ்விப்பார்கள். நீங்கள் கடன் வாங்கப் போகிறீர்கள் மற்றும் நீண்ட காலமாக இந்த வேலையில்…

5 மணி நேரங்கள் ago

அடுத்தமுறை இப்படி பாலமேடு ஸ்பெஷல் ஆனியன் ரவா தோசை இப்படி செய்து பாருங்க!

அனைவரும் விரும்பி உண்ணும் இந்த உணவு, மேலும் ஈஸியான ரெசிபியும் கூட. இப்பொது ஆனியன் ரவா தோசையை எப்படி செய்வதென்று…

14 மணி நேரங்கள் ago

மீந்து போன இட்லியில் இனி ருசியான இட்லி முட்டை உப்புமா இப்படி செய்து பாருங்க உப்புமா மிச்சமாகாது!

காலையில் எழுந்ததும் பெரும்பாலும் நாம் செய்யும் ஒரு வழக்கமான உணவு இட்லி! இந்த இட்லி சில சமயங்களில் அதிகமாக சுட்டு…

15 மணி நேரங்கள் ago