Advertisement
Uncategorized

டிபன் என்ன செய்தாலும் தொட்டு சாப்பிட ருசியான மஷ்ரூம் பட்டர் மசாலா இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

இரவு நேரத்தில் சப்பாத்திக்கு ஒரு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதிலும் சற்று க்ரீமியாக கிரேவி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் காளான் பட்டர் மசாலா செய்யுங்கள். இதுவரை நீங்கள் பன்னீர் பட்டர் மசாலாவைத் தான் கேட்டிருப்பீர்கள். காளான் பட்டர் மசாலா என்பது வேறொன்றும் இல்லை. இதில் பன்னீருக்கு பதிலாக காளானை சேர்க்க வேண்டும். முக்கியமாக இந்த காளான் பட்டர் மசாலா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இப்போது காளான் பட்டர் மசாலாவை எப்படி செய்வதென்று காண்போம். குறிப்பாக சைவ பிரியர்களுக்கு காளான் சிக்கன் போன்றது. இதில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் அசைவத்தை காட்டிலும் காளான் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.

சப்பாத்திக்கு கிழங்கு, குருமா என சாப்பிட்டு போரடித்தவர்கள் நிச்சயம் காளான் பட்டர் மசாலாவை முயற்சி செய்து பார்க்கலாம். வட இந்திய உணவான இது தற்போது தென்னிந்தியாவிலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக மாறியுள்ளது. புளிப்பு, காரம், ஸ்வீட் என காளான் பட்டர் மசாலா நாவுக்கு அலாதியான ருசியை தருவதால் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுகின்றனர். பானி பூரிக்கு பிறகு தென்னிந்தியாவில் பட்டர் மசாலா தனி இடத்தை பிடித்து விட்டது. அதே நேரம் இதை வீட்டில் செய்வதை காட்டிலும் பலரும் ஹோட்டலில் வாங்குவதையே வழக்கமாக வைத்துள்ளனர். கடையில் வாங்கி சாப்பிடுவதை விடவும் வீட்டிலேயே செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. வட இந்திய சுவையில் காளான் பட்டர் மசாலா செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

Advertisement

மஷ்ரூம் பட்டர் மசாலா | Mushroom Butter Masala Recipe In Tamil

Print Recipe
இரவு நேரத்தில் சப்பாத்திக்கு ஒரு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதிலும் சற்று க்ரீமியாக கிரேவி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் காளான் பட்டர் மசாலா செய்யுங்கள். இதுவரை நீங்கள் பன்னீர் பட்டர் மசாலாவைத் தான் கேட்டிருப்பீர்கள். காளான் பட்டர் மசாலா என்பது வேறொன்றும் இல்லை. இதில் பன்னீருக்கு பதிலாக காளானை சேர்க்க வேண்டும். முக்கியமாக இந்த காளான் பட்டர் மசாலா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இப்போது காளான் பட்டர் மசாலாவை எப்படி செய்வதென்று
Advertisement
காண்போம். இதை வீட்டில் செய்வதை காட்டிலும் பலரும் ஹோட்டலில் வாங்குவதையே வழக்கமாக வைத்துள்ளனர். கடையில் வாங்கி சாப்பிடுவதை விடவும் வீட்டிலேயே செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
Course dinner
Cuisine Indian
Keyword Mushroom Butter Masala
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 51

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1 பாக்கெட் காளான்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டேபிள் ஸ்பூன் பட்டர்
  • 1/4 கப் ஃப்ரெஷ் க்ரீம்
  • 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் காளானை நன்கு கழுவி நான்கு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் வெங்காயம், தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பட்டர் சேர்த்து உருகியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • பின் அரைத்து வைத்துள்ள வெங்காய, தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். இதன் பச்சை வாசம் போனதும் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் காளான் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
  • இது கொதித்து தண்ணீர் சுண்டி எண்ணெய் பிரிந்து வந்ததும் கடைசியாக ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் வேக விட்டு கஸ்தூரி மேத்தி, மல்லி இலை தூவி இறக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான காளான் பட்டர் மசாலா தயார். இந்த கறி பிரியாணி, கீ ரைஸ், சப்பாத்தி, ரொட்டி, நாண் போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 51kcal | Carbohydrates: 3.2g | Protein: 3.24g | Fat: 2g | Sodium: 6mg | Potassium: 448mg | Fiber: 7g | Vitamin A: 9IU | Vitamin C: 33mg | Calcium: 18mg | Iron: 7.4mg

இதனையும் படியுங்கள் : பாரம்பரிய ருசியில் சூப்பரான காளான் வெள்ளை குழம்பு இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்கள்!

Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சாதம் இப்படி ஒரு முறை வீட்டிலயே செய்து பாருங்க!

சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை…

6 மணி நேரங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

17 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

1 நாள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

2 நாட்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago