- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- north india
- Course
- Side Dish
உங்கள் வீட்டில் சப்பாத்தி அதிகம் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு கொண்டு அடிக்கடி சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ்ஷை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் அடுத்தமுறை வட இந்திய ஸ்டைலில் ஜீரா ஆலு சப்ஜி செய்யுங்கள். இந்த ஜீரா ஆலு சப்ஜி மிகவும் டேஸ்டியாக இருக்கும்.
முக்கியமாக இப்படி ஜீரா ஆலு சப்ஜி ரெசிபி செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கை கொண்டு வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் எவ்வாறு ஜீரா ஆலு சப்ஜி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த ஜீரா ஆலு சப்ஜி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். இந்த ருசியான ஜீரா ஆலு சப்ஜியை சில நிமிடங்களில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுலபமாக செய்திடலாம். இந்த ஜீரா ஆலு சப்ஜி சாப்பிடுவதற்கு வித்தியாசமான சுவையில் ரொம்பவே சூப்பரா இருக்கும். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான ஜீரா ஆலு சப்ஜி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பஞ்சாபி தம் ஆலு கிரேவி
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் காய்ந்த மிளகாய், சீரகம், தனியா, இஞ்சி மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் சீரகத்தூள், சோம்பு தூள், மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து நன்கு கொதிக்க விடவும். இது நன்கு கொதித்து வந்ததும் தயிர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி விடவும்.
பின் வேகவைத்த உருளைக்கிழங்கு மசித்து சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான ஜீரா ஆலு சப்ஜி தயார்.






