பொதுவாக கடலைப்பருப்பை நம்ம தாளிப்பதற்கு தான் யூஸ் பண்ணுவோம் அப்படி இல்லன்னா கடலைப்பருப்பு வைத்து பருப்பு வடை செஞ்சு சாப்பிடுவோம், பருப்பு உருண்டை குழம்பு செய்து சாப்பிடுவோம். அதை வச்சு பெருசா யாரும் குழம்பு வைக்க மாட்டாங்க ஆனா அந்த கடலைப்பருப்பு வச்சு ஒரு சூப்பரான குருமா ரெசிபி செய்யலாம். அதை சப்பாத்தி பூரி இட்லி தோசை அப்டின்னு எல்லாத்துக்குமே வச்சுக்கலாம். எப்பவுமே ஒரே மாதிரியான ரெசிப்பிஸ் செய்யாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு பாருங்க.
இதுல நம்ம தேங்காய் சோம்பு பொட்டுகடலை எல்லாமே அரைச்சு சேர்த்து செய்ய போறோம். அதனால ருசி ரொம்பவே அருமையாக இருக்கும். கடலைப்பருப்பு கூடவே இரண்டு உருளைக்கிழங்கும் சேர்த்து செய்றதால டேஸ்ட் அவ்வளவு ருசியாக இருக்கும். வேக வைத்து நல்லா மசிச்சு சேர்க்கும் போது ருசி கூடுதலாக இருக்கும் இரண்டு சப்பாத்தி சாப்பிடுறவங்க இந்த கடலைப்பருப்பு குருமா இருந்தா நாலு சப்பாத்தி கூட சாப்பிடுவாங்க.
அதனால கண்டிப்பா இந்த குருமாவை சாப்பிட்டு பாருங்க. கடலை பருப்பு வீட்ல நிறைய இருந்துச்சுன்னா இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க. வீட்ல இட்லி தோசைக்கு நம்ம எப்பவுமே ஒரே மாதிரியான சைடிஷ் செஞ்சு கொடுத்தா போர் அடிக்கும் அப்படி இருந்தாலும் இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க. கண்டிப்பாக டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும். இந்த சுவையான கடலைப்பருப்பு கூட்டு ஒரு தடவை செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க.
உருளைக்கிழங்கு குருமா வைக்க போறீங்க ஆனா உருளைக்கிழங்கு ரொம்ப கம்மியா இருக்கு அப்படின்னாலும் கடலை பருப்பு இருந்தா அதை போட்டு இது செஞ்சு பார்க்கலாம். தேங்காய் எல்லாம் அரைச்சு சேர்க்கறதால அவ்ளோ ருசியா இருக்கும் இதுல பட்டை வகைகள் செய்வது தாளிக்கும் போது வாசனையாகவும் இருக்கும். இந்த சுவையான ரெசிபியை கண்டிப்பாக ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான கடலை பருப்பு குருமா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கடலை பருப்பு குருமா | Kadalai Parappu Kurma Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 50 கி கடலை பருப்பு
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 2 உருளைக்கிழங்கு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 2 பச்சை மிளகாய்
- 2 பட்டை, கிராம்பு
- 2 டீஸ்பூன் சோம்பு
- 1 பிரியாணி இலை
- 1 டீஸ்பூன் பொட்டுக்கடலை
- 1 கல் பாசி
- 2 பெரிய வெங்காயம்
- 3 தக்காளி
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- கொத்தமல்லி தழை சிறிதளவு
செய்முறை
- கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் உருளைக்கிழங்கையும் நறுக்கி சேர்த்து நான்கு விசில் விட்டு இறக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து 1 டீஸ்பூன் சோம்பு, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை கல்பாசி சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- பெரிய வெங்காயம் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு மஞ்சள் தூள் கரம் மசாலா மிளகாய் தூள் சேர்த்து வதக்கி வேக வைத்துள்ள கடலைப்பருப்பு உருளைக்கிழங்கையும் மசித்து சேர்த்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் ஒரு டீஸ்பூன் சோம்பு, பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து அந்த கலவையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான கடலை பருப்பு குருமா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கோழி குருமா இப்படி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!