- Advertisement -
கடலைப்பருப்பு சட்னி அரைச்சு பாருங்க டேஸ்ட் மனசுல நிக்கும் இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி செய்து செய்து சலித்து விட்டதா அப்போ இந்த கடலைப்பருப்பு சட்னி செய்து சுவைத்து பாருங்க அட்டகாசமான சுவையில் கடலைப்பருப்பு சட்னி சுலபமாக, குறைந்த நேரத்தில் ருசியாக சட்டுனு செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.
இதையும் படியுங்கள் : சுவையான கடலைப்பருப்பு வெல்லம் போளி செஞ்சி பாருங்க!
- Advertisement -
ஏனென்றால் அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த கடலைப்பருப்பு சட்னி சப்பாத்திக்கும் சேர்த்து சாப்பிடலாம் அற்புதமாக இருக்கும். இந்த சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
-விளம்பரம்-
கடலைப்பருப்பு சட்னி | Kadalai Paruppu Chutney Recipe in Tamil
கடலைப்பருப்பு சட்னி அரைச்சு பாருங்க டேஸ்ட் மனசுல நிக்கும்!!!!! இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி செய்து செய்து சலித்து விட்டதா அப்போ இந்த கடலைப்பருப்பு சட்னி செய்து சுவைத்து பாருங்க அட்டகாசமான சுவையில் கடலைப்பருப்பு சட்னி சுலபமாக, குறைந்த நேரத்தில் ருசியாக சட்டுனு செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க ஏனென்றால் அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த கடலைப்பருப்பு சட்னி சப்பாத்திக்கும் சேர்த்து சாப்பிடலாம் அற்புதமாக இருக்கும். இந்த சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க
Yield: 4 People
Calories: 61kcal
Equipment
- 1 மிக்ஸி ஜார்
- 1 வாணொலி
தேவையான பொருட்கள்
- 2 tsp கடலை பருப்பு வறுத்தது
- 100 g தேங்காய் துருவியது
- 3 வர மிளகாய்
- புளி சின்ன நெல்லிக்காய் அளவு
- உப்பு தேவையான அளவு
தாளிப்பதற்கு
- 2 tsp எண்ணெய்
- 1 tsp கடுகு
- 1/2 tsp உளுந்தம் பருப்பு
- 5 சின்ன வெங்காயம் நறுக்கியது
- கருவேப்பிலை தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைத்து, வரமிளகாய் சேர்த்து வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் அதே வாணலியில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,வறுத்த கடலைப் பருப்பு சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு மிக்ஸியில் வறுத்த கடலைப் பருப்பு, வரமிளகாய் சேர்த்து, அதோடு துருவிய தேங்காய், புளி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு பௌலில் வைத்துக் கொள்ளவும்.
- பின்பு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றினால், கடலைப்பருப்பு சட்னி ரெடி!!!
Nutrition
Serving: 400g | Calories: 61kcal | Carbohydrates: 6.8g | Protein: 2.5g | Fat: 2.5g | Cholesterol: 1.1mg