Advertisement
Uncategorized

மொறு மொறுன்னு ஆரோக்கியம் நிறைந்த ருசியான கம்பு வடை சுலபமாக வீட்டிலேயே இப்படி செய்து பாருங்க!

Advertisement

நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய தானிய வகைகளில் சிறு தானிய வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான உயிர் சத்துக்களும் நிறைந்ததாக தான் சிறுதானியங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமான ஒரு தானியம் தான் கம்பு. மற்ற எந்த தானியங்களிலும் இல்லாத அளவிற்கு புரதச்சத்து அதிகம் இருக்கக்கூடிய தானியமாகவும் இந்த கம்பு திகழ்கிறது. அப்படிப்பட்ட இந்த கம்பை பயன்படுத்தி கம்பு வடை செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை விரும்பி உண்பார்கள்.

நிறைய இடங்களில் மொறுமொறுப்பாக கம்பு வடை. கடைகளில் சுட்டு விற்பனை செய்யும் வடையிலிருந்து வரக்கூடிய வாசமே நம்மை இழுக்கும். மூக்கைத் துளைக்கும். கட்டாயம் இதை வாங்கி சாப்பிட வேண்டும் என்று நாக்கு சொல்லும். ஆனால், அடிக்கடி இதை கடையில் வாங்கி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது அல்ல. வீட்டிலேயே மொறு மொறுப்பாக சிறுதானிய வகைகளில் உள்ள கம்பு வைத்து வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Advertisement

கம்பு வடை | Kambu Vada Recipe in Tamil

Print Recipe
உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடிய தானிய வகைகளில்சிறு தானிய வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் உடலுக்குத் தேவையான அனைத்து வகையானஉயிர் சத்துக்களும் நிறைந்ததாக தான் சிறுதானியங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும்முக்கியமான ஒரு தானியம் தான் கம்பு. மற்ற எந்த தானியங்களிலும் இல்லாத அளவிற்கு
Advertisement
புரதச்சத்துஅதிகம் இருக்கக்கூடிய தானியமாகவும் இந்த கம்பு திகழ்கிறது. அப்படிப்பட்ட இந்த கம்பைபயன்படுத்தி கம்பு வடை செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை விரும்பிஉண்பார்கள்.
Course snacks
Cuisine tamil nadu
Keyword Kambu Vadai
Prep Time 5 minutes
Cook Time 8 minutes
Servings 4
Calories 91

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1/4 கிலோ கம்பு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 டீஸ்பூன் சோம்பு
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்

Instructions

  • கம்பை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  • வெங்காயம்,பச்சைமிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவேண்டும்.
  • மிக்ஸியில் ஊற வைத்த கம்பு, மிளகாய் வற்றல், சோம்பு சேர்த்து ரவை பதத்தில் அரைத்து எடுக்கவேண்டும். அரைக்கும் பொழுது சிறிது தண்ணீர் தௌpத்து கெட்டியாகஅரைக்கவேண்டும்.
  • அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு நறுக்கி வைத்தவற்றை சேர்த்து அதோடு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசையவேண்டும், வாழை இலையில் எண்ணெய் தடவி எலுமிச்சை அளவு மாவை எடுத்து அதிரசம் தட்டுவது போல் தட்டி வைக்கவேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைத்து தட்டிய வடைகளை போட்டு சிவக்க விட்டு எடுக்கவேண்டும். இப்போது சுவையான கம்பு வடை தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Saturated Fat: 84g | Sodium: 84mg | Potassium: 198mg | Fiber: 4g | Iron: 0.1mg

இதையும் படியுங்கள் : மொறுமொறுன்னு குண்டு குண்டா முட்டைகோஸ் போண்டா நம்ம வீட்டிலயே இப்படி செய்து பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

10 நிமிடத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்து பாருங்கள் ருசி மிகவும் அபாரமாக இருக்கும்!!

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ்…

14 நிமிடங்கள் ago

வெயிலுக்கு இதமா மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா இப்படி செய்து பாருங்க!

வெயில் காலங்களில் நாம் தாகத்தை அடக்குவதற்காக பல குளிர்பானங்கள் குடிப்போம் அந்த வகையில் நாம் குடிக்கும் பானங்களில் ஜிகர்தண்டாவும் ஒன்றுதான்.…

1 மணி நேரம் ago

ஒரு முறை இறாலுடன் கத்தரிக்காய் சேர்த்து மணக்க மணக்க இப்படி குழம்பு வைத்து பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால்…

3 மணி நேரங்கள் ago

சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் ஏற்பட போகும் சில ராசிகள்!

பொதுவாக ஒவ்வொரு கிரகங்களின் பெயர்சியாலும் அனைத்து ராசிக்காரர்களும் பலன்களை கேட்பார்கள் அந்த வகையில் ஜோதிடத்தின்படி மே 12ஆம் தேதி என்று…

4 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு இந்த உளுந்து சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க

பொதுவா நம்ம வீட்டுல தினமும் இட்லி தோசை தான் இருக்கும் அந்த மாதிரி இட்லி தோசை செஞ்சால் அதுக்கு டிஃபரண்டா…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 மே 2024!

மேஷம் இன்று செய்யும் தர்மகாரியம் உங்களுக்கு மன அமைதி மற்றும் சவுகரியத்தைக் கொண்டு வரும். சக அலுவலர்களும் மற்றவர்களும் கவலை…

8 மணி நேரங்கள் ago