Advertisement
அசைவம்

சுவையான கேரளா மட்டன் குருமா செய்வது எப்படி ? வாருங்கள் பார்க்கலாம்…

Advertisement

பொதுவாக நம் வீட்டில் மட்டன் பயன்படுத்தி உணவு தயாரிப்பது என்றால் மட்டன் குழம்பு மற்றும் மட்டன் கிரேவி என அதிகபட்சமாக இந்த இரு வகையிலான மட்டனை தான் அதிகபட்சமாக தயார் செய்து சாப்பிட பரிமாறுவோம். இது நமக்கே சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருககும். இனி இந்த கவலை உங்களக்கு வேணடாம். ஆம், இன்று இந்த பதிவில் கேரளா மட்டன் குருமா எப்படி செய்வது என்று பார்க்க இருக்கிறோம். அதுவும் சாப்பாட்டுக்கு பெயர் போன கேரளாவின் மட்டன் குருமா பிரபலமானது என்று சொல்லலாம். இன்று கேரளா ஸ்டைலில் மட்டன் குருமா செய்வது எப்படி, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

சுவையான கேரளா மட்டன் குருமா

Print Recipe
பொதுவாக நம் வீட்டில் மட்டன் பயன்படுத்தி உணவு தயாரிப்பது என்றால் மட்டன் குழம்பு மற்றும் மட்டன் கிரேவி என அதிகபட்சமாக இந்த இரு வகையிலான மட்டனை தான் அதிகபட்சமாக தயார் செய்து சாப்பிட பரிமாறுவோம். இது நமக்கே சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருககும். இனி இந்த கவலை உங்களக்கு வேணடாம். ஆம், இன்று இந்த பதிவில் கேரளா மட்டன் குருமா எப்படி செய்வது என்று பார்க்க இருக்கிறோம். அதுவும் சாப்பாட்டுக்கு பெயர் போன கேரளாவின் மட்டன் குருமா பிரபலமானது என்று சொல்லலாம். இன்று கேரளா ஸ்டைலில் மட்டன் குருமா செய்வது எப்படி, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course KURUMA, LUNCH
Cuisine Indian, KARALA
Keyword KARALA MUTTON KURUMA, கேரளா மட்டன் குருமா
Prep Time 20 minutes
Cook Time 30 minutes
Total Time 50 minutes
Servings 4 PERSON
Calories 294

Equipment

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

  • ½ KG மட்டன்
  • 2 பெரியவெங்காயம்
  • 1 PIECE பட்டை
  • 3 PIECE ஏலக்காய்
  • 3 PIECE கிராம்பு
  • 1 TBSP சோம்பு
  • 1 TBSP கசகசா
  • ½ கப் தேங்காய் பால்
  • 2 TBSP இஞ்சி பூண்டு விழுது
  • 1 TBSP மல்லித்தூள்
  • 2 TBSP மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள் சிறிது
  • 1 TBSP மிளகு தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 TBSP முந்திரி பேஸ்ட்
  • கொத்த மல்லி சிறிது

Instructions

  • முதலில் வாங்கி வைத்திருக்கும் மட்டனை இரண்டு தண்ணீர் வைத்து நன்றாக அலசி எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு மட்டனை குக்கரில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு போட்டு முடிவ விடவும் 3 விசில் வரும் வரை வைக்கவும்.
  • அதன்பின்
    Advertisement
    இன்னொரு அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடு ஏறும் வரை காத்திருக்கவும் எண்ணெய் சூடேறியவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா, மற்றும் கடல் பாசி போன்றவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு அதனுடன் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும், வெங்காயம் பொன்னிறமாக வரும் முறை வதக்கி கொள்ளுங்கள் வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள், சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின் கடாயை இறக்கி சூடு ஆறும் வரை காத்திருக்கவும் சூடு ஆறியுடன் மிக்ஸி ஜாரில் போட்டு மை போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் குக்கரில் வைத்த மட்டன் மூன்று விசில் வந்தவுடன் அதை இறக்கி விடுங்கள்.
  • பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு அதனுடன் தேங்காய் பால், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்றாக கொதித்து வரும் நிலையில் குக்கரில் வைத்த மட்டனை அந்த தண்ணீருடன் கடாயில் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள் பின்பு முந்திரிப்பருப்பு பேஸ்ட் சிறிதளவு சேர்க்கவும்.
  • பின் கடாயில் உள்ள தண்ணீர் வற்றி குருமா பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடுங்கள் பதத்திற்கு வந்தவுடன் இறக்கி விடுங்கள். பின்பு சிறிதளவு கொத்தமல்லியை தூவி விடுங்கள் இப்போது சுவையான மட்டன் குருமா இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4PERSON | Calories: 294kcal | Protein: 25g | Cholesterol: 97mg | Sodium: 72mg | Potassium: 310mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

8 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

10 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

20 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago