சுவையான கருனைக்கிழங்கு மசியல் கூட்டு இப்படி செய்து பாருங்க ? மதிய உணவுக்கு ஏற்றது!

- Advertisement -

கல்யாண பந்தியில் வைக்கப்படும் ஒவ்வொரு உணவிற்கும் தனிப்பட்ட சுவை இருக்கும். பந்தியில் சாதம், குழம்பு, பொரியல், கூட்டு, அவியல், என்று பலவிதமான வகைகள் வைக்கப்படும். அதிலும் கல்யாண வீட்டு பந்தியில் வைக்கப்படும் சுவையான கருணைக்கிழங்கு மசியல் பற்றி தான் பார்க்கபோகிறோம்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : கல்யாண வீட்டு சுவையில் சௌசௌ கூட்டு செய்வது எப்படி ?

- Advertisement -

இவை வீட்டில் செய்யும் சுவையை விட சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த பொரியலை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். எனவே கல்யாண வீட்டில் வைக்கப்படும் அதே சுவையில் எப்படி கருணைக்கிழங்கு மசியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என் அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
No ratings yet

கருனைக்கிழங்கு மசியல் | Karunai Kilangu Masiyal Recipe in Tamil

பந்தியில் சாதம், குழம்பு, பொரியல், கூட்டு, அவியல், என்று பலவிதமான வகைகள் வைக்கப்படும். அதிலும் கல்யாண வீட்டு பந்தியில் வைக்கப்படும் சுவையான கருணைக்கிழங்கு மசியல் பற்றி தான் பார்க்கபோகிறோம். இவை வீட்டில் செய்யும் சுவையை விட சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த பொரியலை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
Prep Time20 minutes
Active Time20 minutes
Total Time40 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Karunai Kilangu, கருனைக்கிழங்கு
Yield: 5 people
Calories: 251kcal

Equipment

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • ¼ KG கருனைக்கிழங்கு
  • புளி எலுமிச்சை பழம் அளவு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • 1 tsp மிளகாய் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 கைப்பிடி  கொத்தமல்லி

தாளிக்க

  • 2 tsp எண்ணெய்
  • 1 tsp கடுகு
  • 2 வர மிளகாய்
  • ½ tsp வெந்தயம்
  • 1  tsp சீரகம்

செய்முறை

  • முதலில் நாம் எடுத்து கொண்ட கருணைக் கிழங்கின் தோல் பகுதியை சீவி எடுத்து கொள்ளவும். பின் அரிசி களைந்த நீரை குக்கரில் சேர்த்து அதில் கருனைக்கிழங்கை வேக வைக்கவும்.
  • பின் கருனைக்கிழங்கு நன்கு வெந்ததும் கிழங்கை குளிர வைத்து பின் கிழங்கு நன்கு ஆறியதும் கையால் நன்கு மசித்து கொள்ளுங்கள். பினா புளியை நன்கு கரைத்து வடிகட்டி புளி கரைசல் தயார் செய்து கொள்ளவும்.
  • அதன் பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு வர மிளகாய், அரை டீ ஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்
  • பின் இந்த தாளிப்புடன் புளி கரைசலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் மசித்த கருனைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாயத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க வையுங்கள்.
  • பின் நன்கு கொதித்ததும் குழம்புப் பதத்தில் இறக்கினால் பத்து நிமிடங்களில், கூட்டுக்கும் குழம்புக்கும் இடைப்பட்ட பதத்தில் இறுகிவிடும். மேலே கொத்தமல்லித் தழை தூவி பரிமாறலாம். அவ்வளவு தான் கருணைக் கிழங்கு மசியல் தயார்.

Nutrition

Serving: 600gram | Calories: 251kcal | Carbohydrates: 31g | Protein: 21g | Fat: 1g | Saturated Fat: 1.5g | Cholesterol: 12mg | Sodium: 3mg | Potassium: 361mg | Fiber: 6g | Sugar: 2.5g | Calcium: 2mg | Iron: 2mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here