Advertisement
சைவம்

நமது பாரம்பரியமான மற்றும் நெல்லை ஃபேமஸ் கருப்பட்டி பணியாரம் இப்படி சுலபமாக வீட்டிலயே செய்து பாருங்கள்!

Advertisement

பணியாரத்தில் பல்வேறு வகைகள் உள்ளது நெய் பனியாரம் கார பணியாரம் இனிப்பு பணியாரம் காய்கறி பணியாரம் என நிறைய பணியாரங்கள் நாம் சாப்பிட்டு இருப்போம். ஆனால் கிராமங்களில் அடிக்கடி செய்யக்கூடிய பாரம்பரியமான முறைகள் செய்யக்கூடிய கருப்பட்டி பணியாரம் தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். பொதுவாக பெண் குழந்தைகள் கருப்பட்டியை சேர்த்துக் கொள்வது அவர்களது கர்ப்பப்பைக்கு மிகவும் ஆரோக்கியமானது.

பெண் குழந்தைகள் மட்டுமில்லாமல் அனைவருமே கருப்பட்டியை சேர்த்துக் கொள்ளலாம் அது மற்ற சர்க்கரைகளை விட உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமானது. பணியாரம் என்றால் நிறைய குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். பொதுவாக பணியாரத்தை காலை உணவாக அல்லது ஸ்னாக்ஸ் ஆக நாம் சாப்பிடுவது வழக்கம். அதேபோல் நாம் அரிசியை ஊற வைத்த அரைத்து மிகவும் பாரம்பரியமான முறையில் கருப்பட்டி சேர்த்து செய்யப் போகும் இந்த பணியாரம் மிகவும் சுவையானதாகவும் இருக்கும் அதே சமயத்தில் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

Advertisement

குழந்தைகளுக்கு இப்பொழுது நிறைய புதுவிதமான ஸ்னாக்ஸ் பிடித்திருக்கும் ஆனால் அவையெல்லாம் அவர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியது எனவே எப்பொழுதுமே குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும் அந்த வகையில் கருப்பட்டி பணியாரம் அனைவருக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும்

அதே நேரத்தில் குழந்தைகளின் விருப்பப்படி அவர்களது சுவைக்கு ஏற்ப நாம் செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கருப்பட்டி பணியாரம் எல்லா ஊர்களிலும் செய்தாலும் திருநெல்வேலியில் மிகவும் ஃபேமஸான ஒரு உணவு. வாங்க திருநெல்வேலி பேமஸ் கருப்பட்டி பணியாரம் பாரம்பரியமான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

கருப்பட்டி பணியாரம் | Karupatti Paniyaram Recipe In Tamil

Advertisement
Print Recipe
குழந்தைகளுக்கு இப்பொழுது நிறைய புதுவிதமான ஸ்னாக்ஸ் பிடித்திருக்கும் ஆனால் அவையெல்லாம் அவர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியது எனவே எப்பொழுதுமே குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும் அந்த வகையில் கருப்பட்டி பணியாரம் அனைவருக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும். இந்த கருப்பட்டி பணியாரம் எல்லா ஊர்களிலும் செய்தாலும் திருநெல்வேலியில் மிகவும்
Advertisement
ஃபேமஸான ஒரு உணவு. வாங்க திருநெல்வேலி பேமஸ் கருப்பட்டி பணியாரம் பாரம்பரியமான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Karupatti paniyaram
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 200

Equipment

  • 1 பணியார கல்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கப் பச்சரிசி
  • 1/2 கப் துருவிய கருப்பட்டி
  • 1 வாழைப்பழம்
  • 1 சிட்டிகை உப்பு
  • நெய் அல்லது எண்ணெய்

Instructions

  • முதலில் பச்சரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • அரைத்து வைத்த மாவுடன் வாழைப்பழத்தை நன்கு மசித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  •  
    துருவிய கருப்பட்டியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி அந்த மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  • ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது பணியார சட்டியில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து கலந்து வைத்துள்ள மாவில் இருந்து பணியாரமாக ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுத்தால் சுவையான கருப்பட்டி பணியாரம் தயார்.நெல்லை ஃபேமஸ் ஆரோக்கியமான பாரம்பரியமான கருப்பட்டி பணியாரம்!!!

Nutrition

Serving: 100g | Calories: 200kcal | Carbohydrates: 67g | Protein: 13g | Fat: 0.1g | Sodium: 13mg | Potassium: 274mg | Fiber: 6g
Advertisement
Ramya

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

4 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

7 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

17 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago