- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 6
- Cuisine
- Indian
- Course
- Lunch
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, சீரகம், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளி, உப்பு, புளி, பூண்டு, கறிவேப்பிலை, குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கறிவேப்பிலை மிளகு குழம்பு தயார்.






