- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
மதிய சுட சுட சாதத்துடன் இது போன்று கத்திரிக்காய் சாம்பார் வைத்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
ஹோட்டல் சுவையில் கத்திரிக்காய் சாம்பார் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
முதலில் கத்திரிக்காயை நீல வாக்கில் நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
துவரம் பருப்பை நன்கு வேக வைத்துஎடுத்துக்கொள்ளவும். அடுத்து புளியில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து வெந்தயம், கருவேப்பிலை போட்டு 10 நொடி வதக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம், போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
ஒரு நிமிடம் வதக்கிய பிறகு 2 கப் புளித்தண்ணீரை ஊற்றி அத்துடன் தேவையான அளவு உப்பு, சாம்பார் பொடி சேர்த்துன் கலக்கி விடவும்.
அதன் பிறகு கத்திரிக்காய் போட்டு 10 நிமிடம் வேக விடவும்.
கத்திரிக்காய் வெந்ததும் வேக வைத்த பருப்பை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கவும்.






