Advertisement
சைவம்

கேரளா ஸ்டைல் சுவையான அவியல் கூட்டு செய்வது எப்படி ?

Advertisement

என்னதான் பாரம்பரிய முறையில் நம் ஊர்களில் மற்றும் பிற மாவட்டங்களில் வைக்கப்படும் கூட்டு, பொரியல் மற்றும் அவியல்கள் அசத்தலான சுவையில் இருந்தாலும். பிற மாநிலங்களில் அவர்கள் ஸ்டைலில் செய்யப்படும் கூட்டு, பொரியல் மற்றும் அவியல் அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆகையால் இன்று நம் அண்டை மாநிலம் கேரளாவில் செய்யப்படும் அவியல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக அவியல் வாரத்தில் ஒருமுறை நம் உணவுடன் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

இதையும் படியுங்கள் : சுவையான பொன்னாங்கன்னி கீரை கூட்டு செய்வது எப்படி ?

Advertisement

ஏனென்றால் அதில் நாம் அதிகப்படியான காய்கறிகள் சேர்த்து செய்வதால் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதில் நிறைய இருக்கும். ஆனால் பலரது வீடுகளில் தற்சமயம் அவியல் செய்வதை குறைந்து வருகிறது. ஆனால் இந்த கேரளா ஸ்டைலில் அவியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். இதுபோல் செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானதாக இந்த கேரளா ஸ்டைல் அவியல் இருக்கும்.

கேரளா ஸ்டைல் அவியல் | Kerala Style Aviyal Recipe in Tamil

Print Recipe
பிற மாநிலங்களில் அவர்கள் ஸ்டைலில் செய்யப்படும் கூட்டு, பொரியல் மற்றும் அவியல் அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆகையால் இன்று நம் அண்டை மாநிலம் கேரளாவில் செய்யப்படும் அவியல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக அவியல் வாரத்தில் ஒருமுறை நம் உணவுடன் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது ஏனென்றால் அதில் நாம் அதிகப்படியான காய்கறிகள் சேர்த்து செய்வதால் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதில் நிறைய இருக்கும். ஆனால் பலரது வீடுகளில் தற்சமயம் அவியல் செய்வதை குறைந்து வருகிறது. ஆனால் இந்த கேரளா ஸ்டைலில் அவியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Aviyal, LUNCH
Cuisine Indian, Kerala
Keyword Vegtable, காய்கறி
Advertisement
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 5 people
Calories 329

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Ingredients

தேங்காய் அரைக்க

  • 1 முழு காய் துருவிய தேங்காய்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 tbsp சீரகம்
  • 1 கொத்து கருவேப்பிலை

அவியல் செய்ய

  • 1 வாழைக்காய் நறுக்கியது
  • 2 கேரட் நறுக்கியது
  • 1 துண்டு சேனைக்கிழங்கு நறுக்கியது
  • 1 துண்டு வெண் பூசணிக்காய் நறுக்கியது
  • 4 கோத்தவரங்காய் நறுக்கியது
  • 3 அவரைக்காய்
  • 2 கத்தரிக்காய்
  • 4 பீன்ஸ்
  • 1 முருங்கைகாய்
  • உப்பு தேவையான அளவு
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • ½ டம்பளர் தண்ணீர்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 3 tbsp தேங்காய் எண்ணெய்

Instructions

  • முதலில் நாம் எடுத்துக் கொண்ட காய்கறிகளை தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்தி தோல் சீவ வேண்டியுள்ள காய்கறிகளை தோலை சீவி கொண்டு மீடியம் சைஸ் ஆன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
    Advertisement
  • அதன் பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நாம் நறுக்கிய காய்கறிகளில் வெண்பூசணிக்காயை தவிர அனைத்தையும் சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு உப்பு மற்றும் அரை டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் சேர்த்து கிளறிவிட்டு அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கடாயை மூடி வைத்து வேக விடுங்கள்.
  • அதன் பின் காய்கறிகள் பாதி அளவு வந்து வந்தவுடன் நான் தனியாக வைத்திருக்கும் வெண் பூசணிக்காயை சேர்த்து மீண்டும் கடாயை மூடி நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  • இந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு முழு தேங்காயை உடைத்து துருவிய தேங்காய், ஒரு டீஸ்பூன் சீரகம், நான்கு பச்சை மிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு காய்கறிகள் நன்றாக வெந்து வந்ததும் நாம் அரைத்த தேங்காயை கடாயில் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். அதன் பின் இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் இரண்டு டீஸ்பூன் அதிகம் புளிக்காத தயிர் சேர்த்து நன்றாக கிளறி விட்டு கடாயை மூடி ஐந்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  • ஐந்து நிமிடம் கழித்து அவியல் மீது இரண்டு கொத்து கருவாப்பிலை மற்றும் மூன்று டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் ஊற்றி அடுப்பை அணைத்து. சிறிது நேரம் கடாயை மூடி விடுங்கள் அவ்வளவு தான் சுவையான கேரளா ஸ்டைல் காய்கறி அவியல் தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 500gram | Calories: 329kcal | Carbohydrates: 12g | Protein: 32g | Saturated Fat: 1.6g | Cholesterol: 4mg | Sodium: 31mg | Potassium: 1105mg | Fiber: 2g | Sugar: 2.1g | Iron: 9mg
Advertisement
Prem Kumar

Recent Posts

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

1 மணி நேரம் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

1 மணி நேரம் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

3 மணி நேரங்கள் ago

வீட்டில் முட்டைக்கோஸ் மற்றும் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அதை கொண்டு 15 நிமிடங்களில் சுவையான இந்த பட்டாணி முட்டைகோஸ் சாதம் செய்து பாருங்கள்!!

பொதுவாக முட்டைக்கோஸ் சாதம் என்றால் பலருக்கும் ஹோட்டலில் சாப்பிட தான் பிடிக்கும். ஏனென்றால் அதன் சுவையே தனி. வீட்டில் செய்தால்…

4 மணி நேரங்கள் ago

2024 அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் பணம் அதிகமாக சேர்வதற்கு அதிர்ஷ்டம் உள்ள சில ராசிகள்

இந்த ஆண்டு அட்சய திருதியை மே பத்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய…

6 மணி நேரங்கள் ago

2 பீட்ரூட் இருந்தால் போதும் சூப்பரான மில்க் ஷேக் இப்படி வீட்டிலே சுலபமாக செய்து பாருங்க!

பெண்களை பொறுத்த வரையில் நாள் முழுவதும் வீட்டு வேலை செய்து நிச்சயமாக அலுத்து போய் விடுவார்கள். அதற்காக  வேலைகளை செய்யாமலும்…

7 மணி நேரங்கள் ago