- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH, Main Course
கீரைகளின் ராணி என்று அழைக்கப்படுவது இந்த பொன்னாங்காணி கீரைதான். கீரை வகைகளை நாம் வாரத்தில் ஒரு முறையாவதும், உணவில் சேர்த்துக்கொள்ளவது நல்லது. அதிக வெயிலில் வேலை செய்பவர்களுக்கும், கணினியில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும், கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும்.
இதையும் படியுங்கள் : பாரம்பரிய தமிழரின் வல்லாரைக் கீரை துவையல் செய்வது எப்படி ?
இவர்கள் பொன்னாங்கன்னி கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். ஆகையால் இந்த பொன்னாங்கண்ணி கீரையை இந்த மாரி ஒரு முறை செய்து பாருங்கள் மிகவும் அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த பொன்னாங்கானி கீரை கூட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் கீரையை நன்கு கழுவி காம்புகளை ஆய்ந்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் துருவல், தனியா, காய்ந்தமிளகாய், சீரகம், பூண்டு பற்கள், சின்ன வெங்காயம், தக்காளி, எல்லாவற்றையும் லேசாக வருது மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், சேர்த்து கொதிக்க ஆரமித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து அதில் கீரை, உப்பு சேர்த்து முக்கால் பதம் வரை வேகவைக்கவும்.
கீரை வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும், பிறகு கூட்டு கெட்டியானதும் இறக்கி விடவும்.
பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நல்எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், கடுகு போட்டு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து கீரை கூட்டில் ஊற்றி நன்றாக கலந்து விடவும். இப்பொழுது சுவையான பொன்னாங்காணி கீரை கூட்டு தயார்.






