Advertisement
ஸ்வீட்ஸ்

எளிமையான முறையில் வீட்டிலேயே உலர் திராட்சை செய்வது எப்படி ?

Advertisement

நாம் என்னதான் இனிப்பு பொருட்களை வெளியே கடைகளில் சென்று வாங்கி வந்தாலும் அப்படியே இருந்தாலும் நாம் திடீரென நம் வீடுகளை சில இனிப்பு பலகாரங்களை செய்து குடும்பத்துடன் சாப்பிடுவோம் அல்லது நாம் தினசரி அன்றாடம் செய்யும் சில சமையல்களில் கூட உலர் திராட்சைகளை பயன்படுத்துவோம். இப்படி நாம் உலர் திராட்சைகளை கடைகளில் இருந்து வாங்கும் பொழுது அதன் விலை அதிகமாக இருக்கும். அதனால் நாமும் சிறிதளவு வாங்கி தேவைக்கு பயன்படுத்திக் கொள்வோம்.

இதையும் படியுங்கள் : அட்டகாசமான சுவையில் தாய் ஐஸ் டீ செய்வது எப்படி ?

Advertisement

இனி இப்படி செய்யாதீர்கள் திராட்சை பழங்கள் மலிவான விலைகளில் கிடைக்கும் பொழுது அந்த திராட்சை பழங்களை வாங்கி எளிமையான முறையில் உங்கள் வீடுகளில் வைத்த உலர் திராட்சை செய்துவிடலாம். ஆம் இன்று நாம் உலர் திராட்சை எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். உலர் திராட்சை செய்வது மிகவும் எளிமையான முறை இதை பார்த்தால் உங்கள் நீங்களே இதை வீட்டில் செய்து பார்த்து விடுவீர்கள். அதனால் இன்று இந்த உலர் திராட்சை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

2 KG பச்சை திராட்சை பழம்
இட்லி பாத்திரம்
தண்ணீர் தேவையான அளவு
இரண்டு தட்டு

செய்முறை விளக்கம்

இந்த முறையில் உலர் திராட்சை செய்வதற்கு நீங்கள் கருப்பு அல்லது பச்சை இரண்டு திராட்சைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கருப்பு திராட்சை பயன்படுத்த போகிறீர்கள் என்றால் விதைகள் இல்லாத கருப்பு திராட்சையாக எடுத்துக் கொள்ளுங்கள்.

நான் இப்பொழுது உலர் திராட்சை செய்ய பச்சை

Advertisement
திராட்சைகளை எடுத்துக் கொண்டுள்ளேன். முதலில் நாம் எடுத்துக் கொண்ட பச்சை திராட்சைகளை ஒரு பெரிய தட்டில் சேர்த்து அதில் அடிபட்டிருக்கும் திராட்சைகள், அதிகம் பழுத்த திராட்சைகள், கருப்பு புள்ளி இருக்கும் திராட்சைகள், இது போன்ற திராட்சையை தனியாக எடுத்து விடுங்கள்.

அதன் பின்பு இட்லி பாத்தித்தை அடுப்பில் வைத்து தேவையான

Advertisement
அளவு தண்ணீர் ஊற்றிக் கொண்டு, இட்லி தட்டில் உள்ள குழிகளில் நிரம்பும் அளவிற்கு நாம் வைத்திருக்கும் திராட்சை பழங்களை சேர்த்து ஒரு பத்து நிமிடங்கள் நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள்.

பின் பத்து நிமிடம் கழித்து திராட்சை பழங்களை பார்த்தால் பழங்களில் சுருக்கங்கள் இருக்க வேண்டும். இன்னும் சில திராட்சை பழத்தில் சுருக்கங்கள் இல்லை என்றால் மேலும் ஒரு ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்பு வேகவைத்த திராட்சை பழங்களை இரண்டு மூன்று தட்டுகளில் தட்டி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைத்துக் கொள்ளுங்கள் பின்பு அடுத்த நாள் திராட்சை பழங்களை திருப்பி விட்டு அந்த ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைத்து விடுங்கள்.

அதன் பின் உலர் திராட்சை தயாராகி இருக்கும். இப்படி தயார் செய்த உலர் திராட்சைகளை ஃபிரிட்ஜில் அல்லது பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் அப்படியே இருக்கும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

1 மணி நேரம் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

3 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

5 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

10 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

12 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

14 மணி நேரங்கள் ago