சுவையான மணதக்காளி கீரை தோசை செய்வது எப்படி ?

- Advertisement -

இன்று நாம் ஒரு அட்டகாசமான மற்றும் அற்புதமான சுவையில் இருக்கும் ஒரு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் வீட்டில் தோசை சுடும் போது அதிகபட்சமான அளவு முட்டை தோசை மட்டும் தான் செய்திருப்போம். ஆனால் இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய மணதக்காளி கீரை தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் தோசை சுடுவதற்கு பதில்

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : மணமணக்கும் மரவள்ளி கிழங்கு தோசை செய்வது எப்படி ?

- Advertisement -

இது போன்று மணதக்காளி கீரை தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த சுவையான மணதக்காளி கீரை தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
No ratings yet

மணதக்காளி கீரை தோசை | Manathakkali Keerai Dosai Recipe in Tamil

நாம் வீட்டில் தோசை சுடும் போது அதிகபட்சமான அளவு முட்டை தோசை மட்டும் தான் செய்திருப்போம். ஆனால் இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய மணதக்காளி கீரை தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் தோசை சுடுவதற்கு பதில் இது போன்று மணதக்காளி கீரை தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Keerai Dosai, கீரை தோசை
Yield: 3 People
Calories: 234kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 பெரிய பவுள் தோசை மாவு
  • 1 tbsp எண்ணெய்
  • 1 tsp மிளகு
  • 1 tsp சீரகம்
  • 3 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 10 சின்ன வெங்காயம் தோல் உரித்தது
  • 2 கைப்பிடி மணதக்காளி கீரை
  • உப்பு சிறிது

செய்முறை

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் மிளகு மற்றும் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு ஐந்து நொடிகள் வறுக்கவும்.
  • பின் இதனுடன் மூன்று துண்டு இஞ்சி, 5 பல் பூண்டு மற்றும் 10 தோல் உரித்த சின்ன வெங்காயங்களை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கிய வந்தவுடன்.
  • நாம் வைத்திருக்கும் மணத்தக்காளி கீரையை இரண்டு கைப்பிடி அளவு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின் கீரை நன்கு வதங்கியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • பின் ஒரு பவுள் நிறைய தோசை மாவு எடுத்துக் கொண்டு அதனுடன் நாம் அரைத்த கீரை மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்பு வழக்கம்போல் தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடேறியதும்.
  • சிறிது அளவு எண்ணெய் விட்டு இரண்டு கரண்டி மாவு எடுத்து மாவை விரித்து விட்டு ஓரங்களில் சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் வெந்து வந்ததும் எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான மணத்தக்காளி கீரை தோசை தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 400gram | Calories: 234kcal | Carbohydrates: 52g | Protein: 13g | Fat: 2.1g | Saturated Fat: 0.5g | Sodium: 2mg | Potassium: 378mg | Fiber: 16g | Sugar: 1.5g | Vitamin A: 12IU

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here