- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 21 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
மதிய சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சுவையில் முருங்கைக்காய் பொரியல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.
எப்படி இந்த முருங்கைக்காய் பொரியல் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, சேர்த்து தாளிக்கவும். பிறகு அதனுடன் கருவேப்பிலை, மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பின் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.
அடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும், பச்சை வாசனை போனதும் முருங்கைக்காயை நறுக்கி சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வேக விடவும்.
தண்ணீர் இல்லாமல் முருங்கைக்காய் நன்கு வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.






