Advertisement
அசைவம்

கேரளத்து இறால் கூட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு உணவு தான் கேரளத்து இறால்

இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் டோஃபு இறால் பிரட்டல் இப்படி செய்து பாருங்கள்!

Advertisement

கூட்டு இப்போது பார்க்க போகிறோம். கேரளத்து இறால் கூட்டு  சாதத்துடன் சாப்பிட்டால் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். அந்த அளவிற்கு கேரளத்து இறால் கூட்டு சுவையாக இருக்கும். வாருங்கள் இந்த கேரளத்து இறால் கூட்டு  எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

கேரளத்து இறால் கூட்டு – Kerala prawn curry in tamil

Print Recipe
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு உணவு தான் கேரளத்து இறால் ூட்டு.
Advertisement
Course LUNCH
Cuisine Indian, Kerala
Keyword prawn curry, prawn gravy
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 people
Calories 178.76

Equipment

  • 1 வாணலி

Ingredients

  • 250 கிராம் இறால்
  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 கப் தேங்காய்ப்பால்
  • 2 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது
    Advertisement
  • 2 எலுமிச்சை
  • 5 பச்சைமிளகாய்
  • 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
  • உப்பு   தேவைக்கு
  • கொத்தமல்லி சிறிதளவு

Instructions

  • நன்குகழுவிய இறாலை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைக்கவும். தக்காளியைகொதிக்கும் நீரில் போட்டு வைத்து, சிறிது நேரம் கழித்து தோல் உரித்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு பச்சைவாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
  • பின்பு இறாலையும் சேர்த்து வதக்கிய பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  • அத்துடன்தேங்காய்ப் பால் ஊற்றி தேவையான உப்பையும் அதில் சேர்த்து இறால் வேகும் வரை வைக்கவும்.
  • பின்பு கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும், சுவையான கேரளத்து இறால் கூட்டு தயார்.

Nutrition

Serving: 550g | Calories: 178.76kcal | Carbohydrates: 5.95g | Protein: 19.12g | Fat: 7.67g | Saturated Fat: 0.12g | Sodium: 791.58mg | Potassium: 428.71mg | Fiber: 1.78g | Vitamin A: 3.28IU | Calcium: 77.83mg | Iron: 1.51mg
Advertisement
Prem Kumar

Recent Posts

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

41 நிமிடங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

2 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

3 மணி நேரங்கள் ago

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

7 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

7 மணி நேரங்கள் ago

மாம்பழ மாதுளை மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக,மாதுளை சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

7 மணி நேரங்கள் ago